ஸ்விக்கி, உபேர், சொமாட்டோ பாய்ஸ் கவனத்திற்கு.. பணம், பரிசுப் பொருட்களை டெலிவரி பண்ணக் கூடாதாம்

புதுச்சேரியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்போது தனியார் நிறுவனத்தின் மூலம் உணவு டெலிவரி செய்பவர்கள் பணம் மற்றும் இலவச பொருட்களை வழங்கக்கூடாது என புதுச்சேரி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்போது தனியார் நிறுவனத்தின் மூலம் உணவு டெலிவரி செய்பவர்கள் பணம் மற்றும் இலவச

பொருட்களை வழங்கக்கூடாது என புதுச்சேரி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

police meeting with swiggy uber and zomato reps

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் அதிக அளவிலான உணவகங்கள் இயங்கி வருகிறது. மேலும் தற்போது தாங்கள் இருக்குமிடத்திலிருந்து விரும்பும்

உணவகங்களில் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் ஸ்விக்கி, உபேர், சொமாட்டோ போன்ற பல்வேறு தனியார்

police meeting with swiggy uber and zomato reps

நிறுவனங்கள் மூலம் இருக்கும் இடத்திற்கே உணவு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் புதுச்சேரியில் தற்போது அகிகம்பேர் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால் அதிகளவில் டெலிவரி செய்யும் ஆட்கள்

police meeting with swiggy uber and zomato reps

உள்ளதால் உணவு டெலிவரி செய்யும் இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் அவர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

தனியார் ஓட்டலில் காவல்துறை கண்காணிப்பாளர் மாறன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், நகரப்பகுதியில் உள்ள காவல்

நிலையங்களின் ஆய்வாளர்கள் , உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் மேலாண் இயக்குனர்கள், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

police meeting with swiggy uber and zomato reps

இந்த கூட்டத்தில் உணவு டெலிவரி செய்பவர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும், தங்களின் பெயரில் உள்ள தொலைபேசி என்னை பயன்படுத்த வேண்டும், ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், மதுபானங்களை டெலிவரி செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சியினருக்கு சாதகமாக செயல்படும் வகையில் பணம் மற்றும் இலவச பொருட்களை டெலிவரி செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+