புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. ஸ்விக்கி, உபேருக்கு வந்த சோதனையைப் பாருங்க.. பார்சலை பிரித்து போலீஸ் சோதனை!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்விக்கி, உபேருக்கு வந்த பார்சலை பிரித்து போலீஸ் சோதனை

    புதுச்சேரி: நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை ஸ்விக்கி, உபேர், சொமாட்டோ ஆகிய ஊழியர்களுக்கு பெரும் சிக்கல்தான் போல. பணம் அல்லது பரிசுப் பொருட்களை அவர்கள் கொண்டு செல்கிறார்களா என ஆங்காங்கே போலீஸார் மடக்கி சோதனை போட்டு வருகின்றனராம்.

    புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்விக்கி, உபேர், சொமாட்டோ நிறுவன ஊழியர்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அரசியல் கட்சிகள் விநியோகம் செய்கின்றதா என போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஆர்டர் செய்யும் உணவை தவிர்த்து வேறு ஏதேனும் பொருட்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது. புதுச்சேரி - தமிழக எல்லப் பகுதிகளில் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    பொள்ளாச்சி பயங்கரம்.. சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் மக்கள் பொள்ளாச்சி பயங்கரம்.. சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் மக்கள்

    24 மணி நேர ரோந்து

    24 மணி நேர ரோந்து

    அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்க தேர்தல் துறை அதிகாரிகளுடன் இணைந்து புதுச்சேரி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஸ்விக்கி உபேர்

    ஸ்விக்கி உபேர்

    இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளின் ஒரு பகுதியாக, அரசியல் கட்சியினர் ஸ்விக்கி, உபேர், சொமாட்டோ போன்ற ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனங்களின் வாயிலாக வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வினியோகம் செய்கின்றனரா? என போலீசார் இன்று நகரப் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    வீதி வீதியாக சோதனை

    வீதி வீதியாக சோதனை

    மிஷன் வீதி, காந்தி வீதி, நேரு வீதி உள்ளிட்ட நகரின் மையப் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையிலான போலீசார், இருசக்கர வாகனத்தில் டெலிவரிக்காக வேகமாக சென்று கொண்டிருந்த ஸ்விக்கி, உபேர், சொமாட்டோ ஊழியர்களை தடுத்தி நிறுத்தி அவர்கள் கொண்டுசெல்லும் பைகளில் பரிசுப் பொருட்கள் உள்ளதா என சோதனை செய்தனர்.

    கடும் எச்சரிக்கை

    கடும் எச்சரிக்கை


    மேலும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவை தவிர்த்து தங்களுடைய பைகளில் வேறு ஏதேனும் பொருட்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர். மேலும் உணவு டெலிவரி செய்பவர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும், தங்களின் பெயரில் உள்ள தொலைபேசி என்னை பயன்படுத்த வேண்டும், ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், மதுபானங்களை டெலிவரி செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    English summary
    Puducherry Police has raided Swiggy, Zomato and Uber eats delivery boys.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X