அமித் ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்.. திரண்டு வந்த எதிர்க்கட்சிகள்.. பரபரத்த புதுச்சேரி
புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திடீரென ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகப் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் எம்எல்ஏ, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்குக் கூடி இருந்த பாஜகவினர் மேளதாளங்கள் முழங்க அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித் ஷா வருகையையொட்டி அங்கு விமான நிலையத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அமித் ஷா
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஆவடி மத்திய ரிசர்வ் படையினர் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்று தங்கினார். இதனிடையே இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒரு நாள் பயணமாக அமித் ஷா இன்று காலை ஹெலிகாப்டரில் புதுவை சென்றார். புதுவையில் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்குக் காலை 10.15 மணிக்கு வந்த அமித்ஷாவுக்கு துணை நிலை ஆளுநர் அமித்ஷா, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரவேற்றனர்.

ஆர்பாட்டம்
இதனிடையே அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சாரம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்தாத அமித்ஷா திரும்ப போ என்றும், புதுச்சேரியை வஞ்சிக்கும் அமித்ஷாவை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

கருப்பு சட்டை
அப்பொழுது அனைவரும் கறுப்புக்கொடியை ஏந்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கறுப்புக்கொடிகளைப் பறிக்க முயன்றனர். அப்போது திடீரென போராட்டக்காரர்களுக்கும், கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே போல் கருப்பு சட்டை அணிந்து வந்தவரையும் சட்டை போலீசார் கழற்றியதால் தள்ளுமுள்ளு மோசமடைந்தது.

தள்ளுமுள்ளு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பியனர். அப்போது தான் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த இடம் முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது
இது தவிர புதுச்சேரியில் அமித் ஷா வருகையையொட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் முன்னசெரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர், அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் பறக்கவிடத் திட்டமிட்ட ஜெய்சங்கர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications