நீங்க புதுச்சேரியை சேர்ந்தவரா? லக்கி! 1 லட்ச ரூபாய் பைக் வெறும் ரூ 25 ஆயிரத்திற்கு!
புதுவை: பெண்களுக்கு 75 சதவீதம் மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்தில் எப்படி ஸ்கூட்டர் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆதி திராவிடர் நலனுக்காக முதல்வரின் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டின் போது முதல்வர் ரங்கசாமியால் வெளியிடப்பட்டன.

பணியாற்றும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு இ ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கப்படும். இந்த ஸ்கூட்டர்களை கொண்டு மாணவிகளும் வேலைக்கு செல்வோரும் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்லலாம்.
முதல்வரின் புதுமைப் பெண் திட்டம் விளிம்பு நிலை சமூகங்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட சாதிகள், பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மருத்துவச் செலவுகள், மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றுடன் விலையில்லா அரிசியும் வழங்கப்படுகிறது.
கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு குறைந்த விலையில் ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கப்படும். வெற்றிகரமான பரிவர்த்தனைக்குப் பிறகு மானியம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
இந்த திட்டத்தில் பெண்கள், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மட்டுமே மானிய விலையில் ஸ்கூட்டர் கிடைக்கும். விண்ணப்பதாரர் புதுச்சேரியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பயனாளிகளுக்கு இ ஸ்கூட்டர் வாங்க 75 சதவீத மானியம் வழங்கப்படும்.
இதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை, ஜாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் , முகவரி சான்றிதழ், குடியிருப்பு சான்று, வாக்காளர் அடையாள அட்டை.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பதாரர்கள் முதல் முதல்வரின் புதுமை பெண் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். இந்த திட்டத்திற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும். பதிவுப் படிவம் உங்கள் திரையில் திறக்கும். அதில் கேட்கப்படும் தகவல்களை நிரப்பவும்.
விண்ணப்பதாரர் தங்களின் ஜாதி, மற்ற தகவல்களுடன் அவர்களது தனிப்பட்ட விவரங்களையும் கொடுக்க வேண்டும். மேலும் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த முதல்வரின் புதுமைப் பெண் திட்டத்திற்கு ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி செல்லும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இது முற்றிலும் ஆதிதிராவிட சமூகத்தினரின் நலன்களுக்கானது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications