புதுச்சேரி ரங்கசாமிக்கு பறந்து வந்த வெளிநாட்டு மெசேஜ்! பின்னணியில் இருக்கும் நபர் யார் தெரியுமா
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நித்யானந்தா வாழ்த்து தெரிவித்துள்ள செய்தி அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ரங்கசாமியின் செயல்பாடுகளைப் பாராட்டியும், அவருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி தந்தி நாளிதழில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கைலாசா என்ற தனித்தீவை உருவாக்கியுள்ளதாகக் கூறிக்கொள்ளும் நித்யானந்தா, அவ்வப்போது இந்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் மூத்த தலைவர் ரங்கசாமிக்கும் வாழ்த்துசொல்லி உள்ளார்.. புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் ரங்கசாமி எடுத்து வரும் பல்வேறு நலத்திட்டங்களையும், அவருடைய எளிமையான அணுகுமுறையையும் நித்யானந்தா தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, ஆன்மீகப் பற்று கொண்ட முதலமைச்சராக ரங்கசாமி அறியப்படுவதால், இருவருக்கும் இடையிலான இந்த மறைமுகத் தொடர்பு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரங்கசாமி அவர்கள் தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் தீவிர பக்தராக இருந்து வரும் நிலையில், நித்யானந்தாவின் இந்த வாழ்த்து ஒரு புதுவிதமான அரசியல் விவாதத்தைத் தொடங்கியுள்ளது.
நித்தியானந்தா வாழ்த்து
இந்த வாழ்த்துச் செய்தியில் நித்யானந்தா, புதுச்சேரி மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் செழிப்புக்காகவும் ரங்கசாமி மேற்கொண்டு வரும் ஆன்மீக ரீதியிலான மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். கைலாசா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இந்த வாழ்த்து பகிரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரியின் நிர்வாகத் திறனைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், ரங்கசாமியின் தலைமைத்துவத்திற்குத் தனது ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் அவர் உரித்தாக்கியுள்ளார்.
நித்யானந்தா மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், ஒரு மாநில முதலமைச்சருக்கு அவர் வாழ்த்து தெரிவிப்பது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
புதுச்சேரி ரங்கசாமி
|
எனினும், ரங்கசாமி தரப்பிலோ அல்லது புதுச்சேரி அரசு தரப்பிலோ இந்த வாழ்த்து குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ எதிர்வினையும் ஆற்றப்படவில்லை. ஆன்மீக ரீதியில் ரங்கசாமிக்கு உள்ள ஈடுபாடே இத்தகைய வாழ்த்துக்கள் அவரிடம் சேர்வதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதுமட்டுமல்ல, முதல்வருக்கு வாழ்த்து தெரிவிப்பதன் மூலம் தனது இருப்பை மீண்டும் ஒருமுறை பொதுவெளியில் நிலைநாட்ட நித்யானந்தா முயற்சிப்பதாக ஒரு தரப்பினர் கருத்து கூறுகிறார்கள்.
2 நாட்களுக்கு முன்பு, தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் நித்யானந்தா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்..
விஜய்க்கும் பாராட்டு
கைலாசா நாட்டின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், தமிழக மக்களுக்கும் விஜய்யின் நிர்வாகத்திற்கும் தனது ஆசிகள் எப்போதும் இருக்கும். தர்மத்தின் வழியில் இந்த ஆட்சி அமைய வேண்டும், தெளிவான மற்றும் வலிமையான தலைமையுடன் தமிழகத்தை விஜய் வழிநடத்த வேண்டும் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருந்தது..
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்தும் நித்யானந்தா தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.. அந்த வகையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜகவிற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
கைலாசா நாடு - நாகரீக மையம்
உண்மையான இந்து நாகரிகத்தை மீட்டெடுக்கும் மையமாக தனது கைலாசா நாடு திகழ்வதாகக் கூறிக்கொள்ளும் நித்தியானந்தா, இந்திய அரசியலில் நடக்கும் முக்கிய மாற்றங்களைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறார்..
தன்னை ஒரு ஆன்மீகத் தலைவராகக் காட்டிக்கொள்ள முயலும் நித்யானந்தா, இதுபோன்ற வாழ்த்துக்கள் மூலம் தனது இருப்பையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடி வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக கருதப்படும் நித்யானந்தா, டிஜிட்டல் முறையில் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..!!!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications