Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடைசியா தொட்டு விளையாடிய பொருள் இதுதான்.. புதுச்சேரியில் மகளை இழந்த தாய் கதறல் - கலங்கிய கண்கள்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது நிரம்பிய சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாளை சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ள நிலையில் மாயமாகும் முன்பு மகள் கடைசியாக தொட்டு விளையாடிய பொருட்கள் மற்றும் புத்தகத்தை கையில் எடுத்து தாய் கதறி அழுத சம்பவம் அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.

புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி வீட்டு அருகே விளையாடிய நிலையில் திடீரென்று மாயாமானர். குடும்பத்தினர் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 4 நாட்களாக சிறுமி பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை.

Puducherry 9 year old girl murder Mother took the toys she had last played and crying

இந்நிலையில் தான் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்கால் உள்ளது. அதில் சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல் இருந்தது. சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் அவரை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியிருப்பது தெரியவந்தது.

சிறுமியின் உடலை பார்த்த தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அதன்பிறகு உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வேளையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் சிறுமிக்கு நியாயம் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என அவர்கள் கூறினர். மேலும் சிறுமியின் உடலை வாங்க மறுத்தனர்.

இந்த போராட்டங்களால் மொத்த புதுச்சேரியும் பரபரப்பானது. இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ 20 லட்சத்தை வழங்கிய முதல்வர் ரங்கசாமி, தவறு செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என கூறினர். அதன்பிறகு சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நாளை காலையில் சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தான் இணையதளத்தில் உருக்கமான வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது சிறுமியின் புத்தகம், பொம்மைகள் இன்று வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது. கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு 9 வயது மட்டுமே ஆவதால் பொம்மைகளை வைத்து வீட்டில் விளையாடி வந்துள்ளார். இந்த பொம்மைகள் மற்றும் சிறுமியின் பள்ளிக்கூட பேக்கை பார்த்த தாய் அதனை கையில் எடுத்து வைத்து கதறி அழுதார்.

புத்தகத்தில் எழுதப்பட்டு இருந்த பெயரை அவர் பார்த்து கதறி அழுதார். மேலும் சிறுமியின் பொம்மைகள் ஒவ்வொன்றையும் கையில் எடுத்து வைத்து, அந்த பொம்மைக்கும், சிறுமிக்கும் இடையேயான தொடர்பை கூறி கண்கலங்கினார். இதனை பார்த்த அங்கிருந்த பார்த்த அனைவரின் கண்களும் கலங்கி போயின.

இதற்கிடையே தான் சிறுமியை கொலை செய்த வழக்கு தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை போலீசார் உறுதி செய்யவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+