10 கி.மீ ரோடு வாக்.. மயங்கி விழுந்து உயிரிழந்த பயிற்சி காவலர்.. புதுச்சேரியில் துயரம்
புதுச்சேரி: புதுச்சேரியில் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்ட பயிற்சி காவலர், நடைபயிற்சிக்கு பின்னர் மயங்கி விழுந்து, சிகிக்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரியின் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி 10 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ரோட் வாக் பயிற்சியை முடித்துவிட்டு , பயிற்சி பள்ளிக்கு திரும்பிய அவர், திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயிற்சி காவலர் விஜய், சுயநினைவை இழந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்ட பயிற்சி காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications