புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டசபையில் மீண்டும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வலியுறுத்தி சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசுதான் மத்திய பாஜக கூட்டணி அரசை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை சட்டசபையில் இன்று நிறைவேற்றி இருக்கிறது.
நாடு விடுதலைக்குப் பின்னர் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்டவை 1954-ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இதன் பின்னர் மத்திய அரசின் கீழ் செயல்படும் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றாக புதுச்சேரியும் இடம் பெற்றது.

புதுச்சேரி யூனியன் பிரதேசமானது தமிழ்நாடு மாவட்டங்களைச் சூழ்ந்தது. வங்க கடல் பகுதியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவையும் அரபிக் கடல் பகுதியி, மாஹேவும் உள்ளன. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் சில நாட்களாக மாநில அந்தஸ்து தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய சட்டசபை சபாநாயகர் செல்வம், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி சட்டசபையில் 12 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரி முன்னாள் முதல்வர், பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தும் கூட மாநில அந்தஸ்தைப் பெற முடியவில்லை. புதுச்சேரியில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசும் 20203-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனாலும் மத்திய அரசு திருப்பித்தான் அனுப்பியது என குறிப்பிட்டிருந்தார். இதற்கு திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க இந்தியா கூட்டணி எம்பிக்களும் குரல் கொடுக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் தனிநபர் தீர்மானமாக தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அரசு தீர்மானமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் மத்திய அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமா? என்பது விடைதெரியாத கேள்விதான் என்கின்றனர் அம்மாநில அரசியல் கட்சியினர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications