NDA Alliance: அதிமுகவுக்கு அடி.. புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை முடித்த அமித்ஷா.. யாருக்கு எவ்வளவு?
புதுச்சேரி: தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஆளும் என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு (NDA Alliance)இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி முதல்வராக உள்ளார். புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் பாஜகவுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை போல் புதுச்சேரிக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் புதுச்சேரியிலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர்.

இந்த தேர்தலில் மீண்டும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. இந்நிலையில் தான் இன்று புதுச்சேரி சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமித்ஷா போட்ட பதிவு
இதுபற்றி அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி, மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். ‛வளர்ச்சியடைந்த புதுச்சேரி' என்ற மோடியின் கனவை நனவாக்கி, ஒரு மகத்தான வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் (NDA) தடையற்ற ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான விரிவான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது''என கூறியுள்ளார்.
தொகுதி பங்கீடு
இந்த வேளையில் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் தான் வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் முதல்வர் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் பாஜக 10 தொகுதிகள், அதிமுகவுக்கு 2 தொகுதிகள், லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் என்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.
அதிமுகவுக்கு தொகுதி குறைப்பு
அதன்படி பார்த்தால் தமிழகத்தில் என்டிஏ கூட்டணியை தலைமையேற்று இருக்கும் அதிமுகவுக்கும் புதுச்சேரியில் பெரிய அடி விழுந்துள்ளது. ஏனென்றால் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் என்டிஏ கூட்டணியில் முதல்வர் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 14 தொகுதிகளும், பாஜகவுக்கு 9 தொகுதிகளும் வழங்கப்பட்டது.
அதிமுகவுக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதிமுகவுக்கு 2 தொகுதிகள் மட்டும் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது அதிமுகவுக்கு விழுந்த அடியாகும்.
கடந்த முறை வென்றது எவ்வளவு?
மேலும் கடந்த முறை என்ஆர் காங்கிரஸ் கட்சி 16ல் போட்டியிட்டு 10 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 9 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களை கைப்பற்றியது. ஆனால் அதிமுக 5 இடங்களிலும் தோல்வியடைந்தது. இதனால் தான் அதிமுகவுக்கு இந்த முறை தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்?












Click it and Unblock the Notifications