Puducherry Assembly election 2026: புதுவை சட்டமன்ற தேர்தல் ஏப்.9 ஆம் தேதி நடைபெறும்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுவை: புதுவையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு திரும்ப பெற மார்ச் 26 ஆம் தேதி தான் கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையை பொறுத்தவரை சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக உள்ளது. புதுவையில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களையும் சேர்த்து இந்த தொகுதிகள் உள்ளன. புதுவையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் அன்றே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு சற்று முன்னதாகவே தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி, வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 09 ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக திருவிழா தொடங்கியுள்ளது.
புதுவையில் முக்கிய தேதிகள்
* வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்: நாளை (மார்ச் 16 ஆம் தேதி)
* வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: மார்ச் 23 ஆம் தேதி
* வேட்பு மனு மீதான பரிசீலனை: மார்ச் 24 ஆம் தேதி
* வேட்பு மனு திரும்ப பெறும் நாள்: மார்ச் 26 ஆம் தேதி
* வாக்குப்பதிவு நடைபெறும் நாள்: ஏப்ரல் 9 ஆம் தேதி
* வாக்கு எண்ணிக்கை: மே 4 ஆம் தேதி
புதுவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை
* மொத்த வாக்காளர்கள் 9.44 லட்சம் பேர் உள்ளனர்
* ஆண் வாக்காளர்கள் 4.43 லட்சம் பேர் உள்ளனர்
* பெண் வாக்காளர்கள் 5 லட்சம் பேர் உள்ளனர்
* மூன்றாம் பாலினத்தவர்கள் 139 பேர் உள்ளனர்.
புதுவையில் போட்டி யாருக்கு?
புதுச்சேரி - 23, காரைக்கால் பிராந்தியம் - 5, மாகி மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. புதுவையில் தற்போது என். ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 2021 ஆம் தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், திமுக 6 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தம் 84.8 சதவீத வாக்குகள் பதிவானது. வரும் தேர்தலில் பாஜக-என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
என்.ஆர்.காங்.-16 இடங்களிலும் பாஜக 14 இடங்களிலும் போட்டியிடுகிறது. மறுபக்கம் திமுக - காங்கிரஸ், கட்சிகள் கூட்டணியில் உள்ளன. இரு கட்சிகளுக்கும் இடையெ தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது இன்னும் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்படவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications