புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரி முதல்வர் வேட்பாளர் பெரிய மாமனார் ரங்கசாமியா? மருமகன் நமச்சிவாயமா? இடியாப்ப சிக்கலில் பாஜக

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளராக என்.ஆர். காங். தலைவர் ரங்கசாமியை அறிவிப்பதா? காங்கிரஸ் அரசை கவிழ்க்க காரணமாக இருந்த ரங்கசாமியின் தம்பி மருமகன் நமச்சிவாயத்தை அறிவிப்பதா? என்கிற இடியாப்ப சிக்கலில் இருக்கிறது பாஜக.

புதுச்சேரியில் பாஜகவுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட கிடையாது. மாஜி ஆளுநர் கிரண்பேடியின் புண்ணியத்தால் பாஜகவின் 3 பேர் நியமன எம்.எல்.ஏக்கள் ஆகினர்.

புதுச்சேரியில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகியவைதான் செல்வாக்குள்ள கட்சிகள். காங்கிரஸ் கட்சியில் முதல்வர் நாராயணசாமிக்கு அடுத்த நிலையில் இருந்த மாஜி அமைச்சர் நமச்சிவாயத்தை வளைத்துப் போட்டது பாஜக. அதேபோல் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக கபளீகரம் செய்துவிட்டது.

புதுச்சேரி ரீனாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு.. கண்டித்த புதுமாப்பிள்ளை.. நடந்த பயங்கரம் புதுச்சேரி ரீனாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு.. கண்டித்த புதுமாப்பிள்ளை.. நடந்த பயங்கரம்

திமுக நிலைப்பாடு

திமுக நிலைப்பாடு

இதனால் பாஜகவும் புதுச்சேரியில் ஒரு கட்சியாக உருமாறிவிட்டது. திமுக தனித்துப் போட்டியிடும் என்கிற நிலையும் இருந்தது. மேலும் திமுகவின் முதல்வர் வேட்பாளராக மாஜி மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிறுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் திமுக தலைமை இதில் ஆர்வம் காட்டவில்லை.

புதுவை கூட்டணி

புதுவை கூட்டணி

மேலும் புதுச்சேரியிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி என முடிவாகிவிட்டது. இன்னொரு பக்கம் என்.ஆர். காங்கிரஸ்- அதிமுக- பாஜக கூட்டணிதான் என முடிவானது. இந்த நிலையில் காரைக்காலில் தேர்தல் பிரசாரம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுவையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என பேசினார். இது என்.ஆர். காங்கிரஸ்- அதிமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரங்கசாமி கடும் அதிருப்தி

ரங்கசாமி கடும் அதிருப்தி

பாஜக கூட்டணியில் தாம் முதல்வர் வேட்பாளர் என நம்பி நாராயணசாமி அரசை கவிழ்த்தார் ரங்கசாமி. இப்போது பாஜக ஆட்சி அமைக்கும் என அமித்ஷா பேசியதால் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய நமச்சிவாயம் முதல்வர் வேட்பாளராகும் நிலை உருவானது. இதில் கடும் அதிருப்தி அடைந்த ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில் உள்ளது.

பாஜக என்ன செய்யும்?

பாஜக என்ன செய்யும்?

அதிமுகவோ பாஜகவுடன் கூட்டணியில் தொடருவதா? என்.ஆர். காங்கிரஸுடன் போவதா? என திக்கு தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு பாஜகவுக்கு ஒரே வழி என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதுதான். ஆனால் முதல்வர் வேட்பாளராக தங்களை நம்பிவந்த நமச்சிவாயத்தைதான் பாஜக அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. ரங்கசாமியின் தம்பி மருமகன்தான் நமச்சிவாயம். பாஜக இப்போது மாமா ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக்குமா? மருமகன் நமசிச்சிவாயத்தை வேட்பாளராக அறிவிக்குமா? என்பதுதான் புதுவை அரசியலில் அனல் பறக்கும் விவாதம்.

English summary
BJP may accept NR Cong. Chief Rangasamy as CM Candidate for the Puducherry Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X