புதுச்சேரி: ஒரு தொகுதியை இப்பவே பறிகொடுத்த காங்.-: ஏனாம்-ல் ரங்கசாமியை எதிர்த்து போட்டி இல்லை!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரான என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை எதிர்த்து ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. இது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிமுக, பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பாமக இடம்பெறவில்லை. திமுக- காங்கிரஸ்- விசிக கூட்டணி அமைத்துள்ளன.
முன்னாள் முதல்வர் என்.ஆர். ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். ஏனாம் தொகுதியில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய மல்லாடி கிருஷ்ணாராவுக்குதான் செல்வாக்கு அதிகம். தற்போது மல்லாடியார் ஆதரவுடன் ரங்கசாமி ஏனாமில் போட்ட்டியிடுகிறார்.
வேட்புமனுத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசிநாள். கடைசி நிமிடம் வரை காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஏனாம் தொகுதியில் வேட்பாளரையே அறிவிக்காமல் காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. இது அக்கட்சி நிர்வாகிகளை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications