புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் 2021: அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி 4 தொகுதிகளில் போட்டி

அமமுக கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: அமமுக கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த தகவலை டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என பல முனைப் போட்டி நிலவுகிறது. அமமுக உடன் பல கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன.

Puducherry Assembly election2021: SDPI contest in 4 constituency

தமிழக சட்டசபைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு(SDPI) கட்சியும் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளதாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதே போல புதுச்சேரியில் அமமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், காரைக்கால் வடக்கு, மாஹோ தொகுதிகளில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது.

சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் அமமுக தனி கூட்டணி அமைத்து களம் காண்கிறது. அதே போல புதுச்சேரியிலும் தனி அணி அமைத்துள்ளது. எஸ்டிபிஐ கட்சியும் தமிழகம் புதுச்சேரியில் அமமுக உடன் இணைந்து போட்டியிடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+