ஒரேநாளில் 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- புதுச்சேரியில் பெரும்பான்மையை இழந்தது காங். அரசு-அடுத்து என்ன?
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் பதவிகளை ராஜினாமா செய்ததால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி அடுத்து என்ன செய்வார்? என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பும் உருவாகி உள்ளது.
புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஒரு திமுக எம்.எல்.ஏ.வும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

பாஜக நியமன எம்.எல்.ஏக்கள்
அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு புதுவை சட்டசபையில் 14 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இவர்களில் 3 பேர் நியமன எம்.எல்.ஏக்கள். இந்த மூவருமே பாஜகவை சேர்ந்தவர்கள்.

உரிமை இல்லை
ஆனால் நியமன எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்கிறது முதல்வர் நாராயணசாமி அரசு. இதனால் தங்களது அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது; சட்டசபையில் நிரூபிப்போம் என்கிறது காங்கிரஸ். அதாவது 3 நியமன உறுப்பினர்களை கணக்கில் சேர்க்காமல் இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 12; எதிர்க்கட்சிகளுக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் என்கிறது காங்கிரஸ்.

நாராயணசாமி என்ன செய்வார்?
அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, நியமன எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கலாம் என்கின்றனர் எதிர்க்கட்சி தலைவர்கள். தற்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மையை இழந்துவிட்டதால் சட்டசபை கூடுவதற்கு முன்னரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா நாராயணசாமி? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நாளை சட்டசபை கூடுமா?
நியமன உறுப்பினர்கள் விவகாரத்தை முன்வைத்து இன்னமும் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என கூறி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவாரா முதல்வர் நாராயணசாமி என்பது இன்னொரு கேள்வி. இது தொடர்பாக சபாநாயகர் சிவக்கொழுந்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications