இந்தியாவில் முதல்முறை.. மொத்தமாக மரத்தடியில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடர்.. புதுச்சேரியில் செம!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள மரத்தடியில் இந்த சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது.
நாடு முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் பொது மக்கள் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதிலும் தமிழகத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் வரிசையாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழக எம்எல்ஏக்கள்
தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி, பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ .சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (குணமாகிவிட்டார்) ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. முன்னதாக திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசன், கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா ஏற்பட்டது. அதிமுக எம்எல்ஏ நிலோபர்,

புதுச்சேரி எப்படி
இன்னொரு பக்கம் புதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வருகிறார். லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு இதனால் கொரோனா சோதனை செய்ய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

கூட்டம்
இந்த நிலையில் தற்போது புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள மரத்தடியில் இந்த சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது. புதுச்சேரியில் கடந்த 20ம் தேதி சட்டசபை கூட்டம் தொடங்கியது. அங்கு எம்எல்ஏக்கள் எல்லோரும் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் இடையே கொரோனா பரவி இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த கூட்டம் வெளியே நடக்கிறது.
Recommended Video

வெளியே நடக்கிறது
அங்கு இருக்கும் மரத்தடியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல்முறை இப்படி மரத்தடியில் சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது. அங்கு இதற்காக மேஜைக்கள் போடப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் அங்கு கூட்டம் நடக்கும். கூட்டத்திற்கு முன் எம்எல்ஏக்கள் எல்லோருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications