கொரோனா வைரஸ் எதிரொலி.. புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்.. உச்சகட்ட அலர்ட்!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் எதிரொலியாக புதுச்சேரி கடற்கரை சாலை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

மேலும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வெளிமாநிலத்தவர் தீவிர பரிசோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். ஆனால் சுற்றுலாத் தலங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இன்றி புதுச்சேரி நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது.
எனினும் புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கிவரும் கடற்கரை சாலை மட்டும் நேற்று வரை மூடப்படாமல் இருந்தது. ஆனால் கொரோனாவின் தீவிரம் வேகமாக உள்ளதால் புதுச்சேரி அரசு கடற்கரை சாலையையும், இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் பிரதமர் மோடி நாளைய தினம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தியுள்ளதால், புதுச்சேரி முழுவதும் நாளை கடைகள், உணவகங்கள், மதுபானக்கடைகள் உள்ளிட்டவை முடப்பட்டிருக்கும் என வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நாளை பேருந்து சேவையையும் புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது.
அதேபோல் கொரோனா நோய் தொடர்பாக பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை முதல்வருக்கு வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்குமாறு முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பொதுமக்கள் உடல் நலன் கருதி, தங்களின் குறைகள், கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவிக்க நேரில் வராமல், 9345375069 என்கிற தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது இந்த ஏற்பாடு வரும் 31 ம் தேதி வரையில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications