புதுச்சேரியில் பம்முகிறது பாஜக... ஒரு நியமன எம்.எல்.ஏ. வாபஸ்? அதிமுக அன்பழகனுக்கு சான்ஸ்?
புதுச்சேரி: புதுச்சேரியில் தமது 3 நியமன எம்.எல்.ஏக்களில் ஒருவரை வாபஸ் பெற்றுக் கொண்டு அதிமுகவின் அன்பழகனுக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. 6 இடங்களில் வென்ற பாஜக, என்.ஆர். காங்கிரஸுக்கு பீதியூட்டும் வகையில் திடீரென 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்துக் கொண்டது. 3 சுயேட்சைகளையும் வளைத்துக் கொண்டது.

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை
இதனால் புதுச்சேரி சட்டசபையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக மாற்றிக் கொண்டது. பாஜகவின் இந்த அணுகுமுறை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதுவையில் ரங்கசாமியை முதல்வராக்குவது போல் ஆக்கிவிட்டு அவரது ஆட்சியை கவிழ்த்து தனித்து ஆட்சி அமைக்க பாஜக சதி செய்கிறது என குற்றம்சாட்டப்பட்டது.

அதிமுகவுக்கு ஏமாற்றம்
புதுவையில் என்.ஆர்.காங்- பாஜக கூட்டணியில் இடம் பெற்ற அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால் நியமன எம்.எல்.ஏ. பதவியை அதிமுக கேட்டது. ஆனால் அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்து தமது கட்சிக்கே 3 நியமன எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டது. இதனால் என்.ஆர். காங்கிரஸ், அதிமுகவை ஒருசேர பாஜக ஒழிக்கப் பார்க்கிறதோ என்கிற கேள்வியும் எழுந்தது.

பாஜக மீது விமர்சனங்கள்
பாஜகவின் இந்த அதிரிபுதிரி கொல்லைப்புற ஆட்சியை பிடிக்கும் முயற்சிகள் கடுமையான விமர்சனத்தையும் பெற்றுத் தந்தது. இப்போது திடீரென பாஜக பின்வாங்க தொடங்கி இருக்கிறதாம். தமது நியமன எம்.எல்.ஏக்களில் ஒருவரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாம். அதாவது ஒரு நியமன எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய வைக்கப் போகிறதாம்.

திடீரென பம்மும் பாஜக
அப்படி ராஜினாமா செய்யும் இடத்தில் புதுவையில் அதிமுகவின் முகமான அன்பழகனுக்கு அந்த வாய்ப்பை தருகிறதாம் பாஜக. அதாவது கூட்டணி கட்சிகளை அழிக்கவில்லை; அரவணைக்கிறோம் என உலகத்துக்கு காட்டுகிற வகையில் இப்படியான ஒரு நடவடிக்கையை பாஜக கையில் எடுத்திருக்கிறது என்கின்றன புதுச்சேரி வட்டாரங்கள்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications