கைய குடுங்க.. இனி நம்ம ஃப்ரன்ட்ஸ்! பாண்டிச்சேரியில் பஞ்சாயத்து ஓவர்! வெளியான அமைச்சரவை இலாகா லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு பதவியேற்று 85 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படாமல், அவர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாகவே தொடர்ந்து நிலையில், அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு பட்டியல் வெளியாவதில் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் அந்த இழுபறிக்க தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் இடையே நடைபெற்ற முக்கிய ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Puducherry cabinet Rangasamy NR Congress BJP

2026 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்றது. முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார். ரங்கசாமியுடன் அமைச்சர்களும் பதவியேற்ற நிலையில் அவர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை.

85 நாட்களுக்கு மேலாகியும் துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்ததால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. தொகுதி வளர்ச்சிப் பணிகள், துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்தன. மேலும் அமைச்சர்களுக்கு உடனடியாக இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

கடந்த 20ஆம் தேதி அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு தொடர்பான கோப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனிடம் நேரடியாகவே வழங்கியிருந்தார். ஆனால் கோப்புகள் வழங்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் அமைச்சரவை இலக்கா ஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாதது புதுச்சேரி அரசியல் பரபரப்பை கிளப்பியது.

இந்த நிலையில் நேற்றைய தினம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் முதல் அமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பாஜக தரப்பில் கோரப்பட்ட சில முக்கிய இலாக்காக்களை வழங்குவதற்கு முதலமைச்சர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரி அரசில் அமைச்சர்களுக்கான இலாக்கா ஒதுக்கீட்டை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 85 நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மீண்டும் உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல பல முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசின் நிர்வாகப் பணிகள் இனி முழு வீச்சில் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக என்ஆர் காங்கிரஸ் பாஜக இடையேயும் கடும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் தற்போது அந்த மோதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+