பெரியார் குறித்து நீங்க பேசியது வருத்தமளிக்கிறது ரஜினி.. திரும்பபெறுங்க.. நாராயணசாமி
புதுச்சேரி: தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்களை, திரும்பப்பெற்று சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்றும், இந்த சர்ச்சையில் ரஜினி தலையிடாமல் இருப்பது நல்லது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.
துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தந்தை பெரியார் பற்றி கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஹாட் டாபிக் இதுவென்றே கூறலாம். ரஜினியின் கருத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் பாஜக உள்ளிட்ட இந்து மத இயக்கங்கள் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, ரஜினிக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். மேலும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள, ரஜினி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் அசாம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமலிக்க ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தந்தை பெரியார் குறித்து தான் கூறிய கருத்து உண்மைதான் என்றும், தான் கூறிய கருத்தை திரும்ப பெறப்போவதில்லைை என ரஜினி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் தந்தை பெரியார் பற்றி ரஜினி பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, மூட நம்பிக்கையை தூக்கி வீச தன் வாழ்நாளை அர்பணித்தவர் பெரியார். நடிகர் ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசும்போது, பெரியாரை விமர்சனம் செய்து இருக்கிறார். எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ரஜினிகாந்த் பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது.
எனவே பெரியார் குறித்து கூறிய கருத்துக்களை, ரஜினிகாந்த் திரும்பப்பெற்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மேலும் இந்த சர்ச்சையில் அவர் தலையிடாமல் இருப்பது நல்லது. பெரியார், திக குறித்த கருத்துக்களை ரஜினிகாந்த் திரும்ப பெற்றால் அவரது பெருந்தன்மைக்கு நல்லது என தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications