சூழ்ந்த வெள்ளம்.. காலையிலேயே களம் இறங்கிய முதல்வர்.. அதிரடி பேட்டி
புதுச்சேரி; நிவர் புயலால் புதுச்சேரியில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
வங்ககடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே இன்று அதிகாலை 2மணி அளவில் கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, கடலூரில் இடைவிடாமல் கனமழை பெய்தது.

கனமழையாலும், சூறாவளி காற்றாலும் நிவர் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் கன மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியின் முக்கிய சாலைகளான புஸ்சி வீதி,
இந்திராகாந்தி சந்திப்பு மற்றும் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நீரில் ஊர்ந்து செல்கின்றன. இதேபோல் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளிலும், அங்குள்ள வீடுகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வசிக்கும் எல்லையம்மன் கோயில் வீதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் புதுவையின் மையப்பகுதிகளில் உள்ள பாரதி வீதி, புஸ்சி வீதி, பாரதி வீதி பல சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் காலையிலேயே வீட்டை விட்டு வெளியே வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் புதுவை முதல்வர் நாராயணசாமி, நிவர் புயலால் புதுச்சேரியில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.

புதுச்சேரியில் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை கடலில் கொண்டு சேர்க்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மின்சாரம் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் , அதுகுறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்த புயலில் புதுச்சேரியில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதற்கு மக்கள் கொடுத்த ஒத்துழைப்புதான் காரணம் என பாராட்டினார்.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications