ஊரடங்கு நீட்டிப்பு மட்டும் போதாது.. 2வது தவணை நிதியும் தேவை.. நாராயணசாமி கோரிக்கை
புதுச்சேரி: மத்திய அரசு இரண்டாவது முறையாக அனைத்து மாநிலங்களுக்கும் பொருளாதார உதவியை செய்ய வேண்டுமென புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் 3 பேரும், மாஹேவில் ஒருவரும் என 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருக்கும் முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதிகளில் வசிக்கும் சுமார் 207 பேருக்கு நேற்று உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. அதேபோல் புதுச்சேரியின் பல பகுதிகளில் உள்ள 42 பேருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை.
வெளி மாநிலத்துக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலத்துக்கு திரும்பிவர, தங்கியுள்ள மாநிலத்தின் அனுமதியோடு அவர்களை அழைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வாகனங்களில் செல்லலாம் எனவும் கூறியுள்ளது. வாகனங்களில் வருவதில் பல்வேறு சிரமம் இருக்கிறது. ஆகவே பிரமருக்கு கடிதம் எழுதி ரயில் சேவையை தொடங்க வேண்டும், அதில் சமூக
இடைவெளியை கடைபிடித்து வர வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்தேன்.
இதற்கு மாநில அரசுகள் அந்த நிதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தவு வந்துள்ளது. மாநில அரசுகள் எப்படி நிதி அனுப்புவது என்ற குழப்பங்கள் உள்ளன. ஆகவே ரயில் பயணத்தில் கட்டணம் இன்றி செல்ல வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதற்கு பிரதமர் செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினருக்கு எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். வரும் திங்கட்கிழமை முதல் மாத்திரைகள் அவர்களுக்கு வழங்கப்படும். மத்திய அரசு 3 வது முறையாக ஊரடங்கை சில தளர்வுகளோடு நீட்டித்து உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் திறப்பது குறித்து நாளை (மே 3) அமைச்சரவை கூட்டி முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.7 கோடிக்கு மேல் வந்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் வாங்க இந்த நிதி போதாது. எனவே பொதுமக்கள் முன்வந்து நிதி அளிக்க வேண்டும். ஊரடங்கு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வீதிம் 3 மாதங்களுக்கு 15 கிலோ அரிசி கொடுத்ததோடு சரி, நிதி ஆதாரம் எதுவும் மத்திய அரசு கொடுக்கவில்லை.
ஆனாலும் எங்களுடைய வருவாயை வைத்து பல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறோம். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்குவதற்கான கோப்பு தயாரித்து வருகிறோம்.
புதுச்சேரியின் நிதி ஆதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருப்பதால் மாநிலத்துக்கு வருவாய் இல்லை. ஊரடங்கால் ஒன்றரை மாதங்களாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதரம் இல்லை.
மாநில அரசு நிதிப்பற்றாக்குறையால் அவர்களுக்கு உதவுவது சிரமமாக உள்ளது. மத்திய அரசிடம் நிதி இருக்கிறது. எனவே மீண்டும் ஒரு முறை இலவச அரிசி மற்றும் பணம் தர வேண்டும். மத்திய அரசு இரண்டாவது முறையாக பொருளாதார உதவியை அனைத்து மாநிலங்களுக்கும் செய்ய வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தனார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications