சோனியா பிறந்தநாள்... காங்.தொண்டர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் அன்பளிப்பு
புதுச்சேரி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி பிறந்தநாளையொட்டி கட்சி தொண்டர்களுக்கு ஒரு கிலோ வெங்காயத்தை அன்பளிப்பாக வழங்கினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
வழக்கமாக இனிப்புகள் வழங்கப்படும் நிலையில் இந்தாண்டு வெங்காயத்தை பரிசாக தந்துள்ளது புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி.
இதனிடையே காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத்துக்கு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் வெங்காய மாலை அணிவித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

காங்கிரஸ் ஏற்பாடு
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கு இனிப்புகளுக்கு பதிலாக வெங்காயத்தை பரிசாக அளித்தனர்.

நலம் பெற்றார்
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கால் மூட்டில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நாராயணசாமி, அதன்பின்னர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. வீட்டில் ஓய்வில் இருந்தபடியே அலுவல் பணிகளை கவனித்த அவர், சோனியாகாந்தி பிறந்தநாளையொட்டி அந்த விழாவில் பங்கேற்க சென்றார்.

கவனம் ஈர்ப்பு
இதனிடையே தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத்துக்கு வெங்காய மாலை அணிவித்து கவனத்தை ஈர்த்துள்ளார். ஏலக்காய் மாலை, சந்தனமாலை என்கிற விலை உயர்ந்த மாலைகள் வரிசையில் வெங்காய மாலையும் இடம்பெற்றுவிட்டதை உணர்த்துவதற்காக இப்படி மாலை போட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

விழிப்புணர்வு
வெங்காய விலை உயர்வை கெட்டியாக பிடித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர் இதைவைத்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பரப்புரை செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட வெங்காய தட்டுப்பாட்டின் போது போர்க்கால நடவடிக்கைக மேற்கொண்டதாகவும், இப்போதும் மத்திய அரசு அலட்சியமாக இருப்பதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரச்சாரத்தை முனெடுத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications