இது லிஸ்ட்லயே இல்லையே.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரங்கசாமி! புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை
புதுச்சேரி: மாநில அரசு சார்பில் புதுச்சேரியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு விரைவில் சிலை நிறுவப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்து இருக்கிறார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், திமுக தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி திமுக
இதேபோல், புதுச்சேரியிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதி பேரணி சென்று, கருணாநிதியின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ரங்கசாமியுடன் சந்திப்பு
பின்னர் மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா தலைமையில், மாநில திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், திமுக தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், திமுக பொதுக்குழு உறுப்பினர் வேலவன், நித்திஷ் ஆகியோர் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

கருணாநிதி சிலை
இந்த சந்திப்பின்போது, புதுச்சேரியில் கருணாநிதியின் அவர்களின் திருவுருவச்சிலையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை கேட்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, "கருணாநிதி அவர்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு, எனவே புதுச்சேரி அரசு சார்பில் கருணாநிதி அவர்களுக்கு புதுச்சேரியில் சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தார்.

பாஜக கூட்டணி
தற்போது புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் கருணாநிதியின் பேனாவுக்கு சிலை அமைக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் புதுச்சேரி முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்போவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications