புதுச்சேரி: 'அதிரடி' மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்!
ஏனாம்: புதுச்சேரி அரசியலில் பரபரப்பை கிளப்பி வரும் காங்கிரஸின் மல்லாடி கிருஷ்ணாராவ் தமது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை கிளப்பியவர் மல்லாடி கிருஷ்ணாராவ். புதுச்சேரி நிர்வாகத்துக்குட்பட்ட ஏனாம் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் மல்லாடி கிருஷ்ணாராவ்.

புதுச்சேரி அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆந்திரா அரசியலில் களம் காணப் போகிறார் மல்லாடி கிருஷ்ணாராவ் என செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை அவர் மறுத்திருந்தார்.
மேலும் புதுச்சேரி அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்; வரும் சட்டசபை தேர்தலில் நானோ என் குடும்பத்தினரோ போட்டியிடமாட்டோம் எனவும் அறிவித்திருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் அண்மையில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இந்த ராஜினாமாவை முதல்வர் நாராயணசாமி ஏற்கவில்லை.
இந்த நிலையில் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு அனுப்பி உள்ளார் மல்லாடி கிருஷ்ணாராவ். புதுவையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அமைச்சர் நமச்சிவாயம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். இப்போது மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications