உச்சாணிக்கு ஏறிய கரண்ட் பில்..பாஜக, ரங்கசாமி செவி சாய்க்கல.. புதுச்சேரியில் அதிமுக இன்று உண்ணாவிரதம்
புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறது.. மின்சார கட்டணம் உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை இன்று காலை 10 மணிக்கு முன்னெடுக்கிறது.
புதுச்சேரியில் வருடா வருடம் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது .அதனடிப்படையில் 2024-25ம் ஆண்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்த மாநில மின் துறை முடிவு செய்திருந்தது. எனவே, இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், புதுச்சேரி மின்துறை மற்றும் மின் திறல் குழுமம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

அத்துடன், மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் பொதுமக்களிடமும் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தியிருந்தது. அந்த கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுமக்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மின் கட்டண உயர்வு: இதற்கு நடுவில், லோக்சபா தேர்தல் நடந்ததால், மின் கட்டண உயர்வு தற்காலிகமாக புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டது.. இதற்கு பிறகு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. அதாவது, ஒன்றரை மடங்கு கட்டணத்தை அதிகப்படுத்தியிருக்கிறது புதுச்சேரி அரசு.. இது பொதுமக்கள் தரப்பில் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.. எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
அப்படியானால், மின் கட்டண உயர்வுக்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட எந்த விவரமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லையா? லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு காரணமே, இந்த கரண்ட் பில் உயர்வுதானே? பயன்படுத்திய மின் யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்காமல் கூடுதலாக பலவித கட்டணங்களை மக்களுக்குத் தெரியாமல் வசூல் செய்வது பெருத்த அதிருப்தியை உண்டுபண்ணி வருகிறது.
அதிருப்திகள்: தேர்தலில் மக்கள் தந்த பாடத்தை உணராமல், மீண்டும் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதை ஏற்க முடியாது" என்று அரசியல் கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
அந்தவகையில், புதுச்சேரி அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று அதாவது 16ம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிதர போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது... அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ள மின்கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை அதிமுக முன்னெடுத்துள்ளது.
இன்று உண்ணாவிரதம்: இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.. இந்த போராட்டத்துக்கு விசிகவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது புதுச்சேரி அதிமுக.. அந்தவகையில், இன்று நடக்க போகும் உண்ணாவிரதத்தை, புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் - பாஜக அரசானது உற்றுகவனித்து வருகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications