புதுச்சேரி எக்சிட் போல் முடிவுகள்: விஜய்க்கு முட்டை தான்.. மீண்டும் என்டிஏ ஆட்சி.. Peoples Pulse

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று People pulse கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணி 16 முதல் 19 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும், இந்தியா கூட்டணி சார்பில் 10 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும், விஜய்யின் தவெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது. பிற கட்சிகள் 1 முதல் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக People Pulse கணிப்பு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி மொத்தம் உள்ள 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக அமைதியாக நடந்து முடிந்தது. 91.23 சதவீதம் வாக்குப்பதிவானது. வாக்கு எண்ணிக்கை மே 4 ல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

Puducherry Exit Poll Results 2026 Peoples Pulse Seat Prediction Vote Share amp amp Who Will Win

இதில் புதுவை யூனியன் பிரதேசத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று People pulse கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தற்போது ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும். அதாவது மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி 16 முதல் 19 தொகுதிகளில் வெற்றி பெறும். பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் என்.டி.ஏ 16 -19 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதால் எளிதில் ஆட்சியமைக்க முடியும்.

Puducherry Exit Poll Results 2026 Peoples Pulse Seat Prediction Vote Share amp amp Who Will Win

இந்திய கூட்டணி சார்பில் 10 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தவெக ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறாது. பிற கட்சிகள் 1 முதல் 2 இடங்களை பிடிக்கும் என கணித்துள்ளது.

People pulse கருத்துக்கணிப்பு முடிவுகள்:

* தேசிய ஜனநாயக கூட்டணி: 16 - 19

* இந்தியா கூட்டணி: 10 - 12

* தமிழக வெற்றிக் கழகம்: 0

* பிற கட்சிகள்: 1 -2

புதுவை சட்டசபை தேர்தல் 2026:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் சுமார் 9.50 லட்சம் (9,50,311) வாக்காளர்கள் உள்ளனர். அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில், என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க மற்றும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க தலா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16

அதனால் சில தொகுதிகளில் காங்கிரஸும் தி.மு.க-வும் நேரடியாக மோதுகின்றன. 28 தொகுதிகளில் தனித்துக் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகம், இரண்டு தொகுதிகளில் கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளது. நாம் தமிழரும் தனித்து களமிறங்கியுள்ளது.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக, அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மற்றொரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி மற்றும் புதியாக களத்தில் நிற்கும் விஜய்யின் த.வெ.க. - நேயம் மக்கள் கழகம் ஒரு அணி என 4 முனை போட்டி நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+