அரசு ஊழியர்களுக்கு செக்.. இனி வேலைக்கு லேட்டா வரவே முடியாது.. வெளியான சூப்பர் அறிவிப்பு.. என்ன?
புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பணிக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை என புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்ச்சியாக தாமதமாக வரும் அரசு ஊழியர் மீது நடத்தை விதிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடிக்கடி சோதனை நடத்த அனைத்து துறை தலைவர்களுக்கு நிர்வாக சீர்திருத்த துறை சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.
1964 ஆம் ஆண்டு சிஎஸ்எஸ் விதிகளின் 3(1) விதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு அரசு ஊழியர்களும் கடமையில் இருந்து தவறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள் பணிக்கு வந்தவுடன் பணியை தொடங்க வேண்டும். மாறாக பணிக்கு வந்து உடன் பிரேக் எடுக்க கூடாது. கோப்புகளை நகர்த்தாமல் அப்படியே அமர்ந்து இருக்க கூடாது. பணிகளை சரியாக செய்வதை தொடர்ந்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில் உடனக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பணி செய்யாத ஊழியர்கள் மீது துறை ரீதியாக ஆக்சன் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி புதிய அறிவிப்புகள்: புதுச்சேரியில் புதிய புதிய அறிவிப்புகள் பல்வேறு துறைகளில் வெளியாகின்றன. உதாரணமாக புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு 3ஆம் நபர் காப்பீடு செய்யாவிடில் ₹2000, ₹4000 அபராதம் - போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காப்பீடு இல்லாத வாகனங்கள் கண்டறிந்தால் முதன்முறை குற்றத்திற்கு ₹2,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குற்றம் தொடர்ந்தால் ₹4,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் இதேபோல் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
விதி மீறல்: டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
முக்கியமாக சென்னையில் அதிகம் இப்படி நடக்கிறது. அதோடு சிலர் சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய வழிமுறை ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.
புதிய விதி: இந்த நிலையில்தான் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், வண்ண விளக்குகளை பொருத்தி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications