ஜாலிக்காக லாட்ஜில் ரூம் போட்ட புதுச்சேரி அரசு அதிகாரி.. அடுத்த நொடி டுவிஸ்ட்.. இப்படியுமா இருப்பாங்க
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அதிகாரிக்கு இளம்பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. இதனால் அதிகாரிக்கு அந்த பெண் அடிக்கடி போன் செய்து பேசி வந்துள்ளார்.. நாளுக்கு நாள் நீண்ட நேரம் போனில் இருவருமே பேசி வந்துள்ளனர்.. ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்க முடிவானது.. அங்குதான் வினையே ஆரம்பித்தது.. இப்போது 5 பேரை புதுச்சேரி போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
புதுச்சேரி மின்துறையில் பணியாற்றுகிறார் அந்த அரசு அதிகாரி.. அடிக்கடி ஒரு இளம் பெண்ணுடன் போனில் பேசி வந்திருக்கிறார்.. சமீபகாலமாகத்தான் இந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. மிகப்பெரிய அதிகாரியே தன்னிடம் வலிய வந்து பேசியதால், அவரை உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லி அந்த இளம்பெண் அழைத்துள்ளார்.

புதுச்சேரி லாட்ஜ்
இதைக்கேட்டு அந்த அதிகாரிக்கு ஒரே குஷியாகிவிட்டது.. அதனால், மேட்டுப்பாளையம் (புதுச்சேரி) பகுதியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு கடந்த வாரம் வரச்சொல்லி, அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கு பிறகு, 3 நாட்களுக்கு முன்பு, அதிகாரிக்கு ஒரு வீடியோ வந்துள்ளது.. அது லாட்ஜில் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவாகும்..
ஒரு கும்பல் லாட்ஜில் மறைந்திருந்து இதனை வீடியோ எடுத்திருந்ததை கண்டு அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.. மேலும், வீடியோவை சோஷியல் மீடியாவில் பரவ விட்டு விடுவோம் என்று மிரட்டி, கிட்டத்தட்ட ரூ.10 லட்சத்தை பறித்துள்ளனர். அதற்கு பிறகும் அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டி கொண்டேயிருந்தது.
யாரந்த பெண்கள்
இதனால் வேறுவழி தெரியாமல், மேட்டுப்பாளையம் போலீசுக்கு சென்று புகார் தந்துவிட்டார்.. இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போதுதான், அந்த அதிகாரியை மிரட்டியது வாணரப்பேட்டையை சேர்ந்த ரவுடி தீனா என்ற தீனதயாளன் (வயது 29), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஷாருக்கான் (25) ரவுடி ரங்கராஜன் போன்றோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஆனால், முக்கிய குற்றவாளிகள், பெரம்பையை சேர்ந்த சுகந்தி (28), அரியாங்குப்பத்தை சேர்ந்த மணிமேகலை (40), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சுலோச்சனா என்ற அம்மு (32)ஆகியோர் ஆவர்.
வசமாக சிக்கிய அதிகாரி
இந்த 3 பெண்களும் சேர்ந்து இப்படியொரு திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள்.. மின்துறை அதிகாரியின் சபலத்தை பயன்படுத்தி அவரிடமிருந்து ரூ.20 லட்சத்தை பறிக்க பிளான் போட்டிருந்தார்களாம்.. 10 லட்சம் மட்டுமே கிடைத்திருந்த நிலையில், மீண்டும் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்திருக்கிறார்கள். அதற்குள் அதிகாரி போலீசுக்கு சென்றுவிட்டார்..
இந்த 3 பெண்களுக்கும், தீனதயாளன், ஷாருக்கான், ரங்கராஜனும் உடந்தையாக வைத்து கொண்டுள்ளனர்.. இப்போது 5 பேரையும் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளதுடன, தலைமறைவாக உள்ள ரவுடி ரங்கராஜனை தேடி கொண்டிருக்கிறார்கள்.. கைதானவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது..
சபல புத்தி - பணம்
புதுச்சேரி மின்துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வருகிறாராம் அந்த அதிகாரி.. கடந்த சில நாட்களாகத்தான் இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிக்கு சபலப்புத்தி இருப்பதை அறிந்து, அதைவைத்து பணம் பறிக்க முடிவு செய்துள்ளனர்.
இதில் ட்விஸ்ட் என்னவென்றால், சம்பந்தப்பட்ட லாட்ஜை குறிப்பிட்டு, அங்கு அதிகாரியை வர சொல்லியதே அந்த இளம்பெண்தான்.. எனவே, அந்த இளம்பெண் சொன்ன இடத்திற்குச் சென்றபோது, அந்தப் பெண் வேறு ஒரு பெண்ணை அதிகாரியுடன் அனுப்பி வைத்திருக்கிறார். அதன்பிறகு அந்தப் பெண்ணுடன் சென்றுள்ளார் அதிகாரி.
தனிமையில் வீடியோ
2 பேரும் அறையில் தனிமையிலிருந்ததை ஒரு கும்பல் ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறது. இது தெரியாத அதிகாரி, சில நாட்கள் கழித்து மறுபடியும் அந்த இளம்பெண்ணுக்கு போன் செய்து, மீண்டும் சந்திக்க சென்றிருக்கிறார்.. அப்போதுதான் இளம்பெண்ணுடன் 4 பேர், அதிகாரியை சுற்றி வளைத்து பிடித்து, வீடியோவை காட்டி மிரட்டி 10 லட்சம் பறித்துள்ளனர்..
இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது "3 பெண்களைக் கைது செய்திருக்கிறோம். அதிகாரிக்கு பழக்கமான அந்த பெண்கள், அவரிடம் பணம் இருப்பதை தெரிந்துகொண்டு மிரட்டியிருக்கிறார்கள். மற்றவர்களைத் தேடி வருகிறோம்" என்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications