சர்ச்சை! பழங்குடியினரை தரையில் அமர வைத்த விவகாரம்: விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஆளுநர் தமிழிசை நோட்டீஸ்!
புதுச்சேரி: பழங்குடியினரை தரையில் அமரவைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விழா ஏற்பாட்டாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக போராடிய பிர்சா முண்டா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளானது பழங்குடியினர் பெருமித தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிர்சா முண்டா சிலைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி பிர்சா முண்டா பிறந்த இடமான ஜார்கண்ட் மாநிலத்தில் குந்தி மாவட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் வனவாசி பெருமித தின விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் கம்பன் கலையரங்கத்தில், பழங்குடியினரை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.
ஆளுநர் தமிழிசை: இந்த விழா, புதுவை ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஏற்பாட்டில் நடந்தது. இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இ ந்த விழாவில் புதுச்சேரி பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவை தொடங்கப்பட்டன.
இந்த விழாவில் பழங்குடியின மக்கள் சிலர் இருக்கை இல்லாமல் தரையில் அமர வைக்கபட்டனர். பழங்குடி இன மக்கள் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டு பழங்குடியினர்கள் தரையில் அமரவைக்கப்பட்டதாக ஒரு சிலர் அரங்கத்தினுள் கூச்சலிட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
தரையில் அமர வைக்கப்பட்ட பழங்குடியினர்: விழா அரங்கில் இருந்த இருக்கைகளில் பெருமளவு அதிகாரிகளே அமர்ந்திருந்ததால், விழாவுக்கு அழைத்துவரப்பட்டிருந்த பழங்குடியின மக்களுக்கு இருக்கைகள் இல்லை. அதனால், அவர்கள் தரையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து பழங்குடியின மக்கள், தங்களை அழைத்து வந்தவர்களிடம் கேள்வி எழுப்பியதற்கு, இருக்கைகள் இல்லை எனக் கூறி சமாதானம் செய்தனர்.
அதிகமாக மக்கள் வந்ததும் தான் இருக்கை இல்லாமல் போனதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து பழங்குடியின மக்கள் ஏன் தரையில் அமர வைக்கப்பட்டார்கள் என்று விழா ஏற்பாடுகளைச் செய்த அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தமிழிசை சௌந்தரராஜன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஆளுநர் தமிழிசை நோட்டீஸ்: இதுபற்றி ராஜ்நிவாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்ற பழங்குடியினர் பெருமித தின விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட பழங்குடியின மக்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் செய்யப்பட்டது. கூடுதலாக வந்த பழங்குடியின மக்களுக்கு உரிய இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தனது அதிருப்தியை ஆளுநர் தமிழிசை வெளிப்படுத்தியுள்ளார்.
பழங்குடியின மக்களை கவுரவிக்கவும், புதுச்சேரி அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்கவும், அவர்களைப் பாராட்டவும் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் அவர்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பது கண்டனத்துக்குரியது. விழா ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்டுள்ள துறைத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications