படுக்கையறை "ஆஃபர்".. பெண்களை கர்ப்பமாக்கினால் பணம்.. அட்வான்ஸே ரூ.50 ஆயிரம்.. நம்ம புதுச்சேரியிலதான்
புதுச்சேரி: புதுச்சேரி லாட்ஜ்களில் வித்தியாச, வித்தியாசமான சம்பவங்கள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது.. இதோ ஒரு அக்கிரமத்தை பாருங்க.
புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியத்தில் வசிப்பவர் ஸ்ரீஜித்.. 44 வயதாகிறது.. இவர் சொந்தமாக கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.. ஸ்போர்ட்ஸ் கிளப் சந்திப்பில் இந்த கெஸ்ட் ஹவுஸ் செயல்பட்டு வருகிறது.

மர்மநபர்: இங்கு நேபாளத்தை சேர்ந்த ஷாஜன் பட்டாராய் என்பவர் என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.. இவருக்கு 34 வயதாகிறது.. இவருக்கு கடந்த மாதம், யாரோ ஒரு மர்மநபர் போன் செய்துள்ளார்.. தன்னிடம் ஒரு பெஸ்ட் ஆஃபர் இருப்பதாகவும், அதற்கு ஓகே சொன்னால், நாம் ஈஸியாக சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தைகளை சொல்லி உள்ளார்.
அந்த ஐடியா என்னவென்று கேட்டார் ஷாஜன்.. அதற்கு அந்த மர்மநபர், "தான் ஒரு குழந்தை பேறு மருத்துவமனை நடத்தி வருவதாகவும், அங்குவரும் பெண்களுடன் பாலியல் ரீதியான தொடர்பு கொண்டு கர்ப்பமாக்கினால், ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.. இதற்கு அட்வான்சாக ரூ.2 லட்சம் தரப்படும்" என்று சொல்லி உள்ளார்.
ஷாஜன் ஆச்சரியம்: இதைக்கேட்டதுமே ஷாஜன் ஆச்சரியப்பட்டதுடன், பேராசையும் கொண்டு, இந்த திட்டத்துக்கு சம்மதித்துள்ளார்.. பிறகு, இந்த திட்டத்தை செயல்படுத்த, அடையாள அட்டை, ஆதார் கார்டு, பேங்க் அக்கவுண்ட் போன்றவைகள் வேண்டும் என்று மர்ம நபர் கேட்டுள்ளார். ஷாஜனும் அவர் கேட்ட ஆவணங்களை எல்லாம் அனுப்பி வைத்திருக்கிறார்.. உடனே அந்த மர்மநபர் செல்போனில் இருந்து ஷாஜனுக்கு மெசேஜ் வந்துள்ளது.
அதில் ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்வதற்காக ரூ.5 லட்சம் மற்றும் ரூ.49 ஆயிரம் ஆகியவற்றை ஷாஜனின் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான ஆவணங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

அப்ளிகேஷன்: "இந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.. ஆனால் அப்ளிகேஷன் பூர்த்தி செய்வதற்கும், பதிவு கட்டணத்திற்கும் மட்டும் பணம் கட்ட வேண்டி வரும்" என்று அந்த மர்ம நபர் சொல்லியிருக்கிறார்... உடனே ஷாஜனும், அந்த மர்ம நபர் அனுப்பிய கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்து ரூ.50 ஆயிரம் பணத்தை செலுத்திவிட்டார்... அதோடு சரி... அவ்ளோதான் மேட்டர்.
அந்த மர்மநபரை காணவில்லை.. போன் போட்டாலும் எடுக்கவில்லை.. 5 லட்சம் ரூபாய் வங்கி கணக்கு வந்ததாக மெசேஜ் வந்ததே? அதுவும் பொய்.. மெசேஜ் வந்ததுமே ஷாஜன் தன்னுடைய பேங்க் அக்கவுண்ட்டை சரி பார்க்கவும் இல்லை, பணம் வந்ததா என்று செக் செய்யவும் இல்லை.. தன்னுடைய வங்கி கணக்கை ஆய்வு செய்து பார்த்தபோது, எந்த தொகையும் கணக்கில் வராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஷாஜன்.
கதறல்: இதற்கு பிறகுதான் மாகே போலீசுக்கு ஓடினார்.. அந்த மர்ம நபர் யாரென்றே தெரியவில்லை.. பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்று ஆஃபர் சொன்னபோதே, ஷாஜன் யோசிக்காமல் விட்டுவிட்டார்.. இப்போது 50 ஆயிரம் பணத்தை இழந்து கதறி கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications