கொரோனா.. புதுச்சேரியில் கட்டுப்பாட்டு மையம் திறப்பு.. மாஸ்க்கை பதுக்கினால் நடவடிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறித்த சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 104 என்ற இலவச கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் தகவல். மேலும் தனியார் மருந்தகங்களில் முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்பனை அல்லது பதுக்கினால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதுவரை 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாடு பயணம் மேற்கொண்டு புதுச்சேரி திரும்பிய 9 பேரை சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இருப்பினும் 2 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், கோரிமேடு காசநோய் மருத்துவமனைகளில் 2 பேரும் சந்தேகத்திற்கு இடமான வகையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், கொரோனா பாதிப்பு குறித்த சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 104 என்ற இலவச தொலைபேசி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தேவையான அளவு முகக்கவசம் அரசிடம் இருப்பு உள்ளது. தனியார் மருந்தகங்களில் முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை அல்லது பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், காரைக்கால் துறைமுகம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சளி, இருமல் இருப்பவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் திருமண நிகழ்ச்சி, கோவில் திருவிழாக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications