மளிகை கடைக்காரரையும் "சாய்த்த" வனிதா.. புதரில் டார்ச் வெளிச்சம்.. அதென்ன "6 கண்கள்".. கூகுள் பே வேற
புதுச்சேரி: கல்லூரி மாணவி வனிதாவை காணோமாம்.. போலீசார் அவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்?
புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன்.. 50 வயதாகிறது.. இவர் சொந்தமாக மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.. இவரது வீட்டின் மாடியிலேயே, ரூம் ஒன்று காலியாக இருந்திருக்கிறது.

இளம்பெண்: இந்நிலையில், கடந்த 12-ம் தேதி, இவரது கடைக்கு வனிதா என்ற 19 வயது பெண் ஒருவர் வந்துள்ளார். தனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.
புதுச்சேரியில் ஒரு காலேஜில் 2ம்வருடம் தான் படித்து வருவதாகவும், தனக்கு அப்பா, அம்மா யாருமே இல்லை என்பதால், வில்லியனூர் கணவாபேட்டையில் சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருப்பதாகவும், அவர்களுடன் இப்போது சண்டை வந்துவிட்டதால், தனியாக வாடகைக்கு வீடு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அத்துடன், கருணாகரனின் வீட்டு மேல் பகுதியில் உள்ள ரூமை, வாடகைக்கு தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்..
கருணாகரன்: இதனால் கருணாகரன், 2 நாள் கழித்து வந்து சந்திக்கும்படி சொல்லவும், அவரது செல்போன் நம்பரை கேட்டு வாங்கிக்கொண்டு சென்றார் வனிதா.. ஆனால், நம்பர் வாங்கிக்கொண்டு போனதில் இருந்தே, கருணாகரனுக்கு போனை போட்டு பேசி வந்துள்ளார் வனிதா.. பிறகு, வில்லியனூரில் ஒரு ஜூஸ் கடை இருப்பதாகவும், அங்கே தன்னுடன் வந்து ஜூஸ் குடிக்க வருமாறும் அழைத்துள்ளார். உடனே கருணாகரனும் பைக்கை எடுத்து கொண்டு வந்து, வனிதாவுடன் சேர்ந்து ஜூஸ் குடித்துள்ளார்.
2 பேரும் இப்படியே, அடிக்கடி சந்தித்து பேசி வந்திருக்கிறார்கள். சம்பவத்தன்று இரவு, கருணாகரனுக்கு போன் செய்து, "எனக்கு மனசு சரியில்லை, நீங்கள் ரொம்ப கூலாக பேசறீங்க.. நாம ஒருநாள் தனியாக வெளியே செல்லலாம்" என்று அழைத்துள்ளார்.
காட்டுப்பகுதி: வனிதாவின் இந்த பேச்சில் கவிழ்ந்த கருணாகரன், அன்னைக்கு நைட்டே, பைக்கில் வனிதாவை ஏற்றிக்கொண்டு வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் உள்ள பம்ப் ஹவுஸ் அருகே உள்ள புதார் பகுதிக்கு சென்றுள்ளார்.. அங்கே 2 பேரும் உல்லாசமாக இருக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென புதருக்குள்ளிருந்து 3 பேர், டார்ச் லைட் அடித்து கொண்டே வெளியே வந்திருக்கிறார்கள்.
வனிதாவை அங்கிருந்து கிளம்ப சொல்லிவிட்டு, ஆடைகளை கழட்ட சொல்லி கருணாகரனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை வைத்துக்கொண்டு, கருணாகரனிடம் 2 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பயந்துபோன கருணாகரன், கையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை அவர்களிடம் தந்திருக்கிறார்..
பிறகு தன்னுடைய நண்பரிடம் செல்போனில் பேசி, ரூ.75 ஆயிரம் பணத்தை கூகுள்பே செய்ய சொல்லி, அதை மர்ம கும்பலிடம் தந்துவிட்டு, அங்கிருந்து நேராக வில்லியனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் தந்துள்ளார்.
கூகுள்பே: இதையடுத்து போலீசார் கூகுள்பே அனுப்பப்பட்ட நம்பரை வைத்து விசாரணையை துவக்கினர். அந்த மர்ம நபர்கள் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த பப்லு என்கிற பிரகாஷ், (21 வயது) ராமு (22 வயது) என்பது தெரியவந்தது. இந்த 2 பேருமே இப்போது கைதாகி கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள். ஆனால், வனிதாவை காணோமாம்.. தலைமறைவாக உள்ளதால் அவரையும், அருண் என்பவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இதெல்லாமே வனிதாவின் ப்ளான்தானாம்.. கருணாகரனிடம் நிறைய பணம் இருப்பதை தெரிந்துகொண்டு, அதை அபகரிப்பதற்காக நண்பர்கள் அனைவருமே சேர்ந்து போட்ட திட்டமாம். வனிதாவிடம் ஏமாந்துபோனதால், இடிந்து போய் கிடக்கிறார் 50 வயது கருணாகரன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications