போயும் போயும்.. "அங்கே" புகுந்த நபர்.. உடம்பெல்லாம் சாக்கடை.. அது யார் வீடு தெரியுமா? புதுச்சேரி ஷாக்
புதுச்சேரி: புதுச்சேரியில் போலீசுக்கே தண்ணி காட்டியிருக்கிறார் ஒரு நபர்.. யார் அவர்? இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
புதுச்சேரியில் ஜீவா நகர் பகுதியில் ஒரு பாலம் புதிதாக கட்டி வருகிறார்கள்.. இந்த பாலத்துக்கு அடியில் 3 இளைஞர்கள் தினமும் கஞ்சா அடித்து கொண்டிருந்திருக்கிறார்கள்.. அப்போது போதையில் ஒரே அட்டகாசமும் செய்திருக்கிறார்கள்.

எப்பவும் கூச்சலும், அமர்க்களமும் செய்துவந்த நிலையில், இந்த தகவல் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு போனது.. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த 3 இளைஞர்களையும் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்..
சாக்கடை: இதில் 2 இளைஞர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்துவிட்டனர்.. ஆனால், ஒருத்தரை மட்டும் போலீசாரால் பிடிக்க முடியவில்லை.. அந்த நபர் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டே, போலீசுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்தார்.. இப்படியே அரை மணி நேரம் ஓடியது.. ஒருகட்டத்தில் போலீசாரிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காக, அங்கிருந்த ஒரு சாக்கடையில் டபக்கென குதித்துவிட்டார்.
கால்வாய் என்று நினைத்து குதித்தால் அது சாக்கடையாய் இருந்திருக்கிறது.. தலை, உடம்பெல்லாம் சேறும், சகதியுமாகியநிலையில், அந்த சாக்கடையில் இருந்து, வெளியேறி மறுபடியும் தப்பி ஓட ஆரம்பித்தார்.. தலைதெறிக்க ஓடியபடியே, வெங்கட்டாநகரில் உள்ள வீட்டிற்குள் போய் ஒளிந்து கொண்டார்.. பின்னாடியே போலீசார் துரத்தி வந்த நிலையில், எந்த வீட்டிற்குள் நுழைந்திருப்பார் என்று தெரியாமல் அந்த இளைஞனை ஒவ்வொரு வீடாக தேடி வந்தனர்.
வரமுடியாது: அப்போதுதான் அந்த வீட்டின் வாசலில் சேறும், சகதியும் சிந்தி கிடப்பதை பார்த்தனர்.. இதையே அடையாளமாக கொண்டு, அந்த வீட்டிற்குள் நுழைந்து தேடினார்கள்.. அங்கே ஒரு இடத்தில் இளைஞன் பதுங்கியிருப்பதையும் பார்த்துவிட்டனர். அவரை வெளியே வருமாறு போலீசார் அழைத்துள்ளனர்.. ஆனால், வரமுடியாது என்று பிடிவாதம் பிடித்தார்..
அத்துடன், "என்னை விட்டுடுங்க, ப்ளீஸ்" என்று கெஞ்சியபடியே அழ ஆரம்பித்துவிட்டார்.. போதையில் அவர் அழுதாலும், போலீசார் அவரை வெளியே அழைத்து வருவதிலேயே குறியாக இருந்தனர்.அதில் ஒரு போலீஸ்காரர், "எங்களுக்கே ஆட்டம் காட்டிட்டு, கடைசியில் நீதிபதி ஐயா வீட்டுக்கே நேரடியாக வந்துட்டியா" என்றார்..
அதிர்ச்சி: அதைக்கேட்டதும் அந்த கஞ்சா இளைஞனுக்கு தூக்கி வாரிப்போட்டது. "அவசரத்துல ஜட்ஜ் வீட்டுக்குள்ளயா நுழைந்தோம்" என்று அதிர்ச்சியானார்..
இதற்கு பிறகு போலீஸ்காரர்கள், "ஒழுங்கா வெளியே வந்துடுப்பா.. நீ எப்படியாவது தப்பிச்சுருவ.. நாங்க மாட்டிக்க போறோம்" என்று அந்த இளைஞரிடம் போலீசார் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள். அந்த இளைஞர் அப்போதும் மறுக்கவும், உள்ளே நுழைந்து, தரதரவென வெளியே இழுத்து வந்தனர்.. உடம்பெல்லாம் தண்ணீரை கொட்டி, சேறும் சகதியையும் கழுவிவிட்டு, அந்த இளைஞனை குளிக்க வைத்தனர். பிறகு ஆட்டோவில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்...
விசாரணை: அதற்குள் அந்த நபருக்கு லேசான போதையும் தெளிந்துவிட்டது. விசாரணையும் ஆரம்பமானது. அந்த நபர் அரவிந்த்.. பெரியார் நகரை சேர்ந்தவராம்.. அவர் மீது நிறைய திருட்டு கேஸ்கள் இருப்பதும் தெரியவந்தது. ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டிற்குள் பதுங்கிய கஞ்சாபேர்வழியை விரட்டி பிடித்த சம்பவம்தான் வீடியோவாக வெளியாகி உள்ளது. இப்போது மிஸ்டர் அரவிந்த் ஜெயிலுக்குள்ளே இருக்கிறார்..!!












Click it and Unblock the Notifications