தமிழ், தமிழ் என்கிறார்.. மறுபக்கம் தமிழை அழிக்கும் செயலை செய்கிறார்.. தமிழிசையை சாடும் நாராயணசாமி!
புதுச்சேரி: தமிழ், தமிழ் என்று பேசி தமிழை அழிக்கும் வேலையை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்து வருவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
தனி கல்வி வாரியம் இல்லாத யூனியன் பிரதேசமான புதுச்சேரி, தற்போது வரை தமிழக பாடத் திட்டங்களைத்தான் பின்பற்றி வருகிறது. அதேபோல மாஹே பிராந்தியத்தில் கேரள பாடத்திட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
அதனால் புதுச்சேரிக்கு என்று தனி கல்வி வாரியம் வேண்டுமென்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தற்போதுவரை அதற்கான முயற்சி முன்னெடுக்கப்படவில்லை.

தமிழை அழிக்கும் வேலை
இதனிடையே 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு செய்துவருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்தி தமிழை அழிக்கும் வேலையை ஆளுநர் தமிழிசை செய்கிறார்.

இந்தி திணிக்கப்படும்
சிபிஎஸ்இ பாடத்திட்டம் மூலம் இந்தி தான் திணிக்கப்படும். இது புதிய கல்விக் கொள்கையை நுழைக்கும் வேலை. தமிழ், தமிழ் என பேசி மக்களை ஆளுநர் ஏமாற்றுகிறார். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து போராடுவோம். ஆளுநர் தமிழிசைக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. அரசு நிர்வாகத்தில் கோப்புகளில் காலதாமதம், ஆளுநர் தலையீடு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டே முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரங்கசாமிக்கு தெம்பில்லை
முதல்வர் அனுப்பிய வழக்கறிஞர் நியமன கோப்பில் ஆளுநர் மாற்றி முடிவெடுத்துள்ளது மட்டுமில்லாமல் உண்மைக்கு மாறாக பொய்களை பேசி வருகிறார். புதுச்சேரி சூப்பர் முதல்வராக ஆளுநர் தமிழிசை செயல்படுவதை உறுதி செய்யும் வகையிலேயே முதல்வர் ரங்கசாமி கருத்து புலம்பலாக உள்ளது. டம்மி முதல்வராக உள்ள ரங்கசாமி ஆளுநரையோ, மத்திய அரசையோ எதிர்க்கும் தெம்பு அவரிடம் இல்லை.

மாநில அந்தஸ்து
மாநில அந்தஸ்து அளித்தால் புதுச்சேரி பிராந்தியங்களான மாஹே, ஏனாம் ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று உள்துறை நிபந்தனையால் நாங்கள் அதை முன்பு ஏற்கவில்லை. அதனால்தான் மாநில அந்தஸ்து தடைப்பட்டது. முதல்வராக காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி பல முறை இருந்தபோதும் மாநில அந்தஸ்தை கோரவில்லை. மத்திய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மாநிலத்திற்கு எந்த தொந்தரவும் தரவில்லை.

மண் குதிரைகள்
தற்போது ரங்கசாமி மாநில அந்தஸ்துக்காக பிரதமரை சந்திக்க எம்எல்ஏ-க்களை டெல்லி அழைத்து செல்வாரா? என்னையும், வைத்திலிங்கம் எம்பி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரை கட்சி மாறியுள்ள அமைச்சர் லட்சுமி நாராயணன் மண் குதிரைகள் என கூறியுள்ளார். இந்த மண் குதிரைகள்தான் அவருக்கு காங்கிரசில் சீட் கொடுத்தது.

ரங்கசாமி தயாரா?
தொடர்ந்து அவர் இதேபோல பேசி வந்தால் அவரின் தோலை உரிப்போம். அவரது ரகசியங்களை வெளியிடுவோம். அவரது பல ரகசியங்கள் எங்களிடம் உள்ளன. ரங்கசாமி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், இந்த 3 மண் குதிரைகளும் காங்கிரஸ் தொண்டர்களோடு போராட்டத்தில் பங்கேற்கத் தயார். அதே நேரத்தில் ரங்கசாமி போராட தயாரா? என்று நாராயணாசாமி கேள்வி எழுப்பினார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications