படுக்கையறையில் "விருந்தாளி".. புதுச்சேரி லாட்ஜில் ரூம் போட்ட ஜோடி.. அது யாரு 3வது? அட கன்றாவியே
புதுச்சேரி: லாட்ஜில் ரூம் போட்டுள்ளது அந்த இளம்ஜோடி.. கடைசியில் பார்த்தால், இவ்வளவு பெரிய அமர்க்களமாகி, போலீஸ் கேஸ் வரை போய்விட்டது.. என்ன நடந்தது புதுச்சேரியில்?
சமீப காலமாகவே ரகசிய கேமராக்கள் விவகாரம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.. மக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை போலீசார் வைத்துள்ளனர்.
இந்த கேமராக்களை வைத்தபிறகுதான், எத்தனையோ குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிகிறது.. பல வழக்குகளுக்கு தடயங்களை அள்ளித்தரும் கருவியாக இந்த சிசிடிவி கேமராக்கள் உதவி கொண்டிருக்கின்றன.

கேமராக்கள்: ஆனால், பொது இடங்களில், சிசிடிவி அல்லாத ரகசிய கேமராக்களை வைத்து சில விஷமிகள், கேடுகெட்ட செயல்களில் இறங்கிவிடுகிறார்கள்.. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், பெண் ஊழியர்களுக்கான பாத்ரூமில்கூட, பேனா கேமராவை வைத்து படம் பிடித்ததாக, அறநிலையதுறை அதிகாரி மீதே புகார் எழுந்த சம்பவமும் இந்த தமிழ்நாட்டில் உண்டு.
கோயில் குளம் பகுதிகளிலேயே இந்த லட்சணம் என்றால், ஹோட்டல்களிலும், லாட்ஜ்களிலும், ரிசார்ட்களிலும், குடும்பத்துடன் தங்க நேரும் நபர்களின் நிலைமை என்னாவது? சில லாட்ஜ்களில் தெரிந்தே இந்த தவறுகள் ஊக்கப்படுத்தப்படுகிறது என்றாலும், இதில் பாதிக்கப்படுவது என்னவோ, ஒன்றுமறியாத இளம்பெண்களும், பெண் குழந்தைகளும்தான்.
வார இறுதி நாட்கள்: இதோ யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. புதுச்சேரி ஒர சுற்றுலாப் பகுதி என்பதால், வார இறுதி நாள்களில் மட்டுமல்லாமல், வாரத்தின் மற்ற நாள்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள்.. அதனால்தான், புதுச்சேரி முழுவதும், தனியார் விடுதிகள் மலிந்துகிடக்கின்றன.. இங்கெல்லாம், குழந்தைகளுடன் குடும்பத்துடனும் பலர் இங்கு வருவார்கள்.. காதலர்களும் பலர் வருவார்கள்.. கள்ளக்காதலர்களும் பலர் வருவார்கள்..

அப்படித்தான், கடந்த 8-ம் தேதி சனிக்கிழமை, ஒரு காதல் ஜோடி வந்துள்ளது. அவர்கள் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர்கள்.. அந்த இளைஞனுக்கு 22 வயதாகிறது. தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு, பஸ் ஸ்டாண்டு பக்கத்திலுள்ள ஜே.ஜே ரெசிடென்சி (JJ Residency) என்ற லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.
படுக்கையறை: முதல்நாள் ஊரெல்லாம் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தது இந்த ஜோடி.. 2வதுநாள் இரவு 2 பேரும் தூங்கப்போனார்கள்.. அப்போது, படுக்கையில் இருந்த பிளக் பாயிண்ட் துளையிலிருந்து, லைட் போல மின்னி மின்னி எரிந்தது.. சிறிய வெளிச்சம் என்றாலும், சம்பந்தமே இல்லாமல் ஏன் எறிய வேண்டும் என்று அந்த இளைஞருக்கு சந்தேகம் வந்துள்ளது.. அதனால், அருகில் சென்று பார்த்திருக்கிறார். அந்த பிளக் பாயிண்ட் துளைக்குள், சிறிய எல்.இ.டி விளக்கு நின்று நின்று எரிந்து கொண்டிருந்ததை பார்த்துமே பதறிவிட்டார்.
உடனே ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்து வந்து, அதை பிரித்து பார்த்திருக்கிறார்.. அப்போதுதான் அதற்குள் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை பார்த்து மிரண்டு போனார்.. அந்த ரூம் முழுக்க நடக்கும் நிகழ்வுகள் அப்பட்டமாக, அந்த கேமராவில் பதிவுசெய்துகொண்டிருந்ததை கண்டு, இந்த ஜோடி விக்கித்து போய் உட்கார்ந்துவிட்டது..
பிளக் பாயிண்ட்: பிறகு, அந்த ரகசிய கேமராவை கழற்றிக் கொண்டுபோய், அந்த ஹோட்டலின் ஊழியர்களிடம் கொண்டுபோய் காட்டி, அதுகுறித்து கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்த ஊழியர்கள், "எங்களுக்கும், அதுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்கள்.. இந்த ஜோடி ஆவேசேம் குறையாமல் கேள்வி எழுப்பவும், சரி, இந்த விஷயத்தை பெரிசுப்படுத்தாதீங்க என்று லாட்ஜ் நிர்வாகம் சொன்னதாம்..

ஒருகட்டத்தில் இளைஞருக்கு மிரட்டலும் விடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் அந்த இளைஞர் எதற்குமே பயப்படவில்லை.. நேராக உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார்.. நடந்த சம்பவத்தை எல்லாம் புகாராக எழுதி தந்துள்ளார். ஆனால், உடனடியாக அந்தப் புகாரை போலீஸ் தரப்பில் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. உடனே, உருளையன்பேட்டை போலீஸார் இளைஞரின் புகாரை வாங்காமல் இழுத்தடிப்பதாக, சோஷியல் மீடியாவிலும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துவிட்டன.
அலைக்கழிப்பு: ஆனால், இளைஞரை தாங்கள் அலைக்கழிக்கவில்லை என்றும், தாமதமாக புகார் தந்ததால் விசாரணையை துவங்கி உள்ளோம்.. உண்மையிலேயே அந்த ரூமில் கேமரா இருந்தது உறுதியாகியிருக்கிறது. அதனடிப்படையில் விசாரணை செய்து வருகிறோம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.
எனினும், விசாரணைகள் தற்போது துவங்கி உள்ளன.. இளைஞர் தந்த புகாரின் அடிப்படையில் ஹோட்டல் ஊழியர்களான ஆனந்து, ஆபிரகாம் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன.. ஆனால், இவ்வளவும் நடந்து முடிவதற்குள், அந்த ஓட்டல் ஊழியர்கள் 2 பேரும் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.. இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.. தேடிக்கொண்டிருக்கிறார்கள் போலீசார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications