படுக்கையறை விருந்தாளி.. புதுச்சேரி ஓட்டல் ரூமில்.. யாரந்த 4 பேர்.. கோவாவுக்கே கிளம்பி போன போலீஸ்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: லாட்ஜில் ரூம் போட்டுள்ளது அந்த இளம்ஜோடி.. கடைசியில் பார்த்தால், இவ்வளவு பெரிய அமர்க்களமாகி, கோர்ட் வரை விவகாரம் செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை.. இன்று மேலும் 2 பேர் கைதாகி உள்ளனர்.. என்ன நடந்தது புதுச்சேரியில்?

சமீப காலமாகவே ரகசிய கேமராக்கள் விவகாரம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.. மக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை போலீசார் வைத்துள்ளனர்.

Puducherry Lodge Room and Why did Puducherry Police arrest Lodge Owner including 4 people

இந்த கேமராக்களை வைத்தபிறகுதான், எத்தனையோ குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிகிறது.. பல வழக்குகளுக்கு தடயங்களை அள்ளித்தரும் கருவியாக இந்த சிசிடிவி கேமராக்கள் உதவி கொண்டிருக்கின்றன.

கேமராக்கள்: ஆனால், பொது இடங்களில், சிசிடிவி அல்லாத ரகசிய கேமராக்களை வைத்து சில விஷமிகள், கேடுகெட்ட செயல்களில் இறங்கிவிடுகிறார்கள்.. அப்படித்தான் புதுச்சேரியில், சில மாதங்களுக்கு முன்பு ஒரு கொடுமை நடந்தது. ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த காதல் ஜோடி, கடந்த ஜூலை 10ம் தேதி பஸ் ஸ்டாண்டு பக்கத்திலுள்ள ஜே.ஜே ரெசிடென்சி (JJ Residency) என்ற லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறது.

அப்போது, இருவரும் தூங்க போகும்போது, படுக்கைக்கு பக்கத்தில் இருந்த பிளக் பாயிண்ட் துளையிலிருந்து, லைட் போல மின்னி மின்னி எரிந்துள்ளது. சிறிய வெளிச்சம் வருவதை பார்த்து, அந்த இளைஞர், அருகில் சென்று, ஸ்க்ரூ ட்ரைவரை வைத்து பிரித்து பார்த்துள்ளார்,. அப்போதுதான் அதற்குள் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை பார்த்து மிரண்டு போனார்.. இறுதியில் போலீஸ் வரை விவகாரம் சென்றது.

புகார்: இதுகுறித்து அந்த இளைஞர் உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.. போலீசாரும் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ரெசிடென்சி உரிமையாளர் இளைய ஆழ்வார் (45), இருதயராஜ் (69) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், ரகசிய கேமரா பொருத்திய ஓட்டல் மேனேர் ஆனந்த் (25), ஊழியர் ஆபிரகாம் (22) ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஆனந்த், ஆபிரகாம் ஆகிய 2 பேரும் கோவாவில் வாஸ்கோடகாமாவில் பதுங்கி இருப்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவாவுக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அவர்கள் 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.

தள்ளுபடி: முன்னதாக, இந்த வழக்கில், சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டபோது, நீதிபதி மறுத்துவிட்டார்.. புதுச்சேரி, ஒரு சுற்றுலா மையம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அங்கு நடந்தால், சுற்றுலாவில் பாதிப்பு ஏற்படும். அதனால், மனுதாரர்களுக்கு முன்ஜாமின் வழங்க விரும்பவில்லை என்று மனு தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+