படுக்கையறை "இன்டர்காமில்" யாரது? ஸ்குரூடிரைவருடன் இளைஞர்.. புதுச்சேரி லாட்ஜில் ஒரே அக்கப்போர்.. சீல்
புதுச்சேரி: லாட்ஜ் ரூமில் நடப்பதையெல்லாம், ரகசிய கேமரா வைத்து படம்பிடித்திருக்கிறார்கள்.. இந்த சம்பவம் வெடித்து கிளம்பியதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் இந்த விவகாரத்தில் களமிறங்கி உள்ளனர். என்ன நடந்தது புதுச்சேரியில்?
கடந்த வாரம் புதுச்சேரியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருந்தது.. புதுச்சேரி சுற்றுலாப் பகுதி என்பதால், வார இறுதி நாள்களில் மட்டுமல்லாமல், வாரத்தின் மற்ற நாள்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள்.. அதனால்தான், புதுச்சேரி முழுவதும், தனியார் விடுதிகள் மலிந்துகிடக்கின்றன..
இங்கெல்லாம், குழந்தைகளுடன் குடும்பத்துடனும் பலர் இங்கு வருவார்கள்.. காதலர்களும் பலர் வருவார்கள்.. கள்ளக்காதலர்களும் பலர் வருவார்கள்..

இளம்ஜோடி: அப்படித்தான், கடந்த 8-ம் தேதி சனிக்கிழமை, ஒரு இளம்காதல் ஜோடி வந்துள்ளது. அவர்கள் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர்கள்.. அந்த இளைஞனுக்கு 22 வயதாகிறது. தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு, பஸ் ஸ்டாண்டு பக்கத்திலுள்ள ஜே.ஜே ரெசிடென்சி (JJ Residency) என்ற லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார். 2வது நாள் இரவு, இருவரும் தூங்க போகும்போது, படுக்கைக்கு பக்கத்தில் இருந்த பிளக் பாயிண்ட் துளையிலிருந்து, லைட் போல மின்னி மின்னி எரிந்தது..
சிறிய வெளிச்சம் வருவதை பார்த்து, அந்த இளைஞர் அருகில் சென்று பார்த்திருக்கிறார். அந்த பிளக் பாயிண்ட் துளைக்குள், சிறிய எல்.இ.டி விளக்கு எரிந்து கொண்டிருப்பதை பார்த்தார்..
ரகசிய கேமரா: பிறகு ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்து வந்து, அதை பிரித்து பார்த்துள்ளார். அப்போதுதான் அதற்குள் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை பார்த்து மிரண்டு போனார்.. அந்த ரூமில் நடக்கும் நிகழ்வுகள் அத்தனையும் அந்த கேமராவில் பதிவாகி கொண்டிருந்ததை பார்த்து இந்த ஜோடி மிரண்டுவிட்டது.
அந்த ரகசிய கேமராவை கழற்றிக் கொண்டுபோய், அந்த ஹோட்டலின் ஊழியர்களிடம் காட்டியதற்கு, "எங்களுக்கும், அதுக்கும் எந்த தொடர்பும் இல்லை, இந்த விஷயத்தை பெரிசுப்படுத்தாதீங்க என்று லாட்ஜ் நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டதாம். ஒருகட்டத்தில் இளைஞருக்கு மிரட்டலும் விடுத்துள்ளதாக தெரிகிறது.
லாட்ஜ் : இதற்கு பிறகு அந்த இளைஞர் உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, நடந்த சம்பவத்தை சொல்லி, புகார் தந்துள்ளார். ஆனால், புகாரை வாங்காமல் போலீசார் இழுத்தடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது.. ஒருகட்டத்தில் விவகாரம் பெரிதானதையடுத்து, போலீசார் இந்த விஷயத்தை கையில் எடுத்தனர். பின்னர், 100 அடி ரோட்டில் உள்ள அந்த அந்த லாட்ஜுக்கு போலீசார் நேரடியாகவே சென்று பார்வையிட்டனர்.
அப்போது அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஓட்டல் மேனேஜர் தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த ஆனந்து (25) ஓட்டல் ஊழியரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆப்ரகாம் (22) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அதற்குள் அவர்கள் மாயமாகிவிட்ட நிலையில், தீவிர வேட்டை நடத்தி போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.
அந்தரங்கம்: இந்நிலையில் சம்பந்தப்பட்ட லாட்ஜூக்கு நகராட்சி நிர்வாகிகள் சீல் வைத்துள்ளனர். அந்த லாட்ஜில் வந்து தங்கும் அனைவரின் அந்தரங்கத்தையும் ரகசிய கேமராவால் பதிவு செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, உழவர்கரை நகராட்சிக்கு காவல்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.. இந்த பரிந்துரையின், நகராட்சி அதிகாரிகள், போலீசார் முன்னிலையிலேயே, இந்த லாட்ஜுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications