புதுச்சேரி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024: காங்கிரஸிற்கு வெற்றி.. மீண்டும் வைத்தியலிங்கம் சாதனை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கையில் காலையிலிருந்து புதுச்சேரி தொகுதியில் முன்னிலையில் வகித்த வைத்தியலிங்கம் இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

தமிழகத்தின் அருகே உள்ள யூனியன் பிரதேசம் புதுச்சேரி. இங்கு ஒரேயொரு லோக்சபா தொகுதி மட்டுமே உள்ளது. லோக்சபா தேர்தல் என்று வந்துவிட்டால் தமிழ்நாட்டுடன் சேர்த்து புதுச்சேரியையும் சேர்த்து தான் நாம் பேசுகிறோம். தமிழ்நாட்டில் 39 தொகுதி, புதுச்சேரியின் ஒரு தொகுதி என 40 இடங்கள் மீதும் நமது கவனம் இருக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான லோக்சபா தேர்தலிலும் புதுச்சேரி கவனம் ஈர்த்துள்ளது. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பியான முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், அதிமுக சார்பில் தமிழ்வேந்தன், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

Lok Sabha Election 2024 Puducherry

இந்த நிலையில் வெளியான முடிவுகளின்படி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் 426005 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் 289489 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் சார்பில் மேனகா 39603 வாக்குகளையும், அதிமுக சார்பில் தமிழ் வேந்தன் 25165 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர்

இந்த தொகுதிக்கு 1967 முதல் 2019 வரை மொத்தம் 14 முறை லோக்சபா தேர்தல் நடந்துள்ளது. இதில் 10 முறை காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக, என்ஆர் காங்கிரஸ் கட்சிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்பியாக உள்ள வைத்திலிங்கம் மீண்டும் களமிறங்கி உள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வைத்திலிங்கத்துக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளன.

அதேபோல் பாஜக வேட்பாளர் நமச்சிவாயமும் புதுச்சேரியின் முக்கிய தலைவராக உள்ளார். இவர் தற்போது ஆளும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் புதுச்சேரியின் உள்துறை அமைச்சராக உள்ளார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போல் தொகுதி முழுவதும் நமச்சிவாயம் அறியப்பட்டவராக உள்ளார். மேலும் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாமகவுடனான கூட்டணி உள்ளிட்டவை நமச்சிவாயத்துக்கு பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது.

மேலும் அதிமுக சார்பில் தமிழ்வேந்தன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். அதிமுகவுக்கு புதுச்சேரியில் கட்டமைப்பு இருந்தாலும் கூட அந்த கட்சியால் லோக்சபா தேர்தலில் ஜொலிக்க முடியாத நிலை தான் உள்ளது. கடந்த 1977 ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் அரவிந்த் பால பஜானூர் வென்ற பிறகு அந்த கட்சியால் மீண்டும் ஜெயிக்க முடியவில்லை. இது அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் 2000ம் ஆண்டுக்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகளின் விபரம் வருமாறு:

புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் யார்

2004 ம் ஆண்டின் தேர்தல் முடிவுகள்

எம் ராமதாஸ் (பாமக) - 2,41,653(வெற்றி)
லலிதா குமாரமங்கலம் (பாஜக) - 1,72,472
நம்பியார் (ஜேடியூ) - 27,546

2009ம் ஆண்டின் தேர்தல் முடிவுகள்

நாராயணசாமி (காங்கிரஸ்) - 3,00,391(வெற்றி)
எம் ராமதாஸ் (பாமக) - 2,08,619
அசானா (தேமுதிக) - 52,638
விஸ்வேஸ்வரன் (பாஜக) - 13,442

2014ம் ஆண்டின் தேர்தல் முடிவுகள்

ராதாகிருஷ்ணன் (என்ஆர் காங்கிரஸ்) - 2,55,826(வெற்றி)
நாராயணசாமி (காங்கிரஸ்) - 1,94,972
ஓமலிங்கம் (அதிமுக) -1,32,657
நசீம் (திமுக)- 60,580

2019ம் ஆண்டின் தேர்தல் முடிவுகள்

வைத்திலிங்கம் (காங்கிரஸ்) - 4,44,981(வெற்றி)
நாராயணசாமி (என்ஆர் காங்கிரஸ்) - 2,47,956
முகமது சுப்பிரமணியன் (மநீம) - 38,068
ஷர்மிளா பேகம் (நாம் தமிழர்) - 22,857

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+