புதுச்சேரியில் 25 லிட்டர் கேன்களில் பெட்ரோல்.. வில்லியனூர் பெட்ரோல் பங்குகளில் யார்னு பார்த்தீங்களா

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: சர்வதேச அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், அமைதி பூங்காவான புதுச்சேரியையும் நிலைகுலைய செய்துள்ளது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள போர் மேகங்களால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் பரவியுள்ள நிலையில், அதன் நேரடித் தாக்கம் புதுச்சேரி மாநிலத்தை ஆட்கொண்டுள்ளது. ஆம், அங்கேயும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் திணறி கொண்டிருக்கிறார்கள் மக்கள்..!!

மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டிருப்பது, சுற்றுலா நகரமான புதுச்சேரியின் முதுகெலும்பாக விளங்கும் ஹோட்டல் தொழிலை முற்றிலுமாக முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Petrol Bunk

புதுச்சேரி முழுவதும் உள்ள சின்ன ஹோட்டல்கள், பெரிய ஹோட்டல்கள் என சுமார் 750-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் எரிபொருள் இல்லாமல் தவித்து வருகின்றன.

புதுச்சேரியில் 25 லிட்டர் பெட்ரோல் கேன்

வணிக சிலிண்டர் விநியோகம் தடைப்பட்டதால், பல முன்னணி ஹோட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்து வருவதால், வேறு வழியின்றி பல ஓட்டல்கள் உணவகங்கள் வரிசையாக மூடப்பட்டு வருகின்றன.

கேஸ் சிலிண்டர்களை மட்டுமே நம்பி இயங்கி வந்த குட்டி குட்டி டீக்கடைகள் , சாலையோர தள்ளுவண்டி கடைகள், இருப்பு வைத்திருந்த எரிபொருள் தீர்ந்தவுடன் தங்களது வணிகத்தை நிறுத்திவிட்டன. ஒரு சில ஹோட்டல்களில் மட்டும் பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்புகளை பயன்படுத்தி சமையல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் இது ஒட்டுமொத்த தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.

இந்த இக்கட்டான சூழலில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக பரவிய காட்டுத்தீ போன்ற வதந்தி, பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனூர் பெட்ரோல் பங்க்

வில்லியனூர், அரும்பாத்தபுரம் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகள் முதல் நகரத்தின் மையப்பகுதி வரை உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் நள்ளிரவு முதலே மக்கள் குவியத் தொடங்கினர்.

வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்ப வந்தவர்களால் கிலோமீட்டர் கணக்கில் நீண்ட வரிசைகள் உருவானது. வெறும் வாகனங்கள் மட்டுமின்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 லிட்டர் தண்ணீர் கேன்கள், 10 லிட்டர் மற்றும் 5 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோலை வாங்கிச் சேமிக்க மக்கள் முண்டியடித்துள்ளனர்.. இதனால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியிருக்கிறார்கள்.

புதுச்சேரி ஓட்டல்கள்

புதுச்சேரியில் இப்படியொரு பதற்றத்தைத் தணிக்க அரசுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வீட்டு உபயோக சிலிண்டர்கள் வழங்குவதில் எந்தவிதத் தடையும் இல்லை என்றும், போதுமான ஸ்டாக் உள்ளதாகவும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல, மேலும், தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சர்வதேசச் சூழலால் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் முடக்கம், புதுச்சேரியின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாகப் பாதித்துள்ளது.. இன்று காலை முதலே பெட்ரோல் நிலையங்களில் அலைமோதும் கூட்டம் குறையாததால், மாநிலம் முழுவதும் ஒருவிதப் பரபரப்பான சூழலே நீடித்து வருகிறது.

ஆனால், புதுச்சேரியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, பெட்ரோல் நிலையங்களில் கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் தற்காலிகமாக தடை செய்வது அவசியமாகும். காரணம், இது எரிபொருள் பதுக்கப்படுவதை தடுப்பதோடு, வரிசையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்குத் தடையின்றி பெட்ரோல் கிடைக்க வழிவகுக்கும்.

ஹோட்டல்கள் முடக்கம்?

அதுமட்டுமல்ல, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதுச்சேரிக்குத் தேவையான கூடுதல் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பை உடனடியாகக் கொண்டுவர அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஹோட்டல் தொழில் முடங்குவதை தவிர்க்கவும் மக்களின் அத்தியாவசிய உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், குறைந்தபட்ச எண்ணிக்கையிலான வணிக சிலிண்டர்களை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் விநியோகிக்க குடிமைப் பொருள் வழங்கல் துறை முன்வர வேண்டும் என்பதே புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்பாகும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+