புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உட்பட 6 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு- பாஜக நமசிவாயத்துக்கு உள்துறை!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட 6 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவித்து 2 மாதங்களாகிவிட்டன. முதல்வராக ரங்கசாமி பதவியேற்று 50 நாட்களுக்குப் பின்னரே அமைச்சர்கள் யார் என்பதே முடிவு செய்யப்பட்டது.

Puducherry Ministers portfolios allocated- BJPs Namasivayam gets Home Ministry

அமைச்சர்கள் பதவியேற்று சில வாரங்களாகிவிட்ட நிலையில் இன்றுதான் இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமிக்கு பொதுநிர்வாகம், உள்ளாட்சி உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜகவின் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை, மின்வாரியம் உள்ளிட்ட 6 துறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. என்.ஆர். காங்கிரஸின் லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித் துறை உட்பட 6 துறைகள், ஜெயக்குமாருக்கு வேளாண்துறை, சட்டம் உட்பட 6 துறைகள், சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து, ஆதி திராவிடர் நலத்துறை உட்பட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜகவின் மற்றொரு அமைச்சர் சரவணகுமாருக்கு பொது விநியோகம், சிறுபான்மையினர் விவகாரங்கள் உள்ளிட்ட 6 இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+