புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு இன்று காலை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் அடுத்தடுத்து பல்வேறு எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் முதன் முறையாக எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

புதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வருகிறார். லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் இவரின் உடல்நிலை நன்றாகவே இருக்கிறது, அச்சப்பட தேவையில்லை என்கிறார்கள். என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால் அங்கு அரசியல் தலைவர்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் கடந்த சில நாட்கள் முன் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் எம்எல்ஏ ஜெயபால் பங்கேற்றார்.3 நாட்களுக்கு 20ம் தேதி தொடங்கிய கூட்டத் தொடரில் ஜெயபால் கலந்து கொண்டார். இதனால் அவர் மூலம் வேறு யாருக்காவது கொரோனா பரவி இருக்குமா என்று அச்சம் எழுந்துள்ளது.
முன்னதாக திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசன், கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா ஏற்பட்டது. அதிமுக எம்எல்ஏ நிலோபர்,
அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி, பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ .சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (குணமாகிவிட்டார்) ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
Recommended Video
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications