ஐந்து வருட போராட்டம்.. நிறைவேறிய நாராயணசாமியின் கனவு.. ஆனாலும் பெரும் சோகம்
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம், முதல்வர் நாராயணசாமியின் ஐந்து வருட கனவு நினைவாகி உள்ளது. ஆனால் அவரது கட்சியில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் 4பேர் அவருக்கு எதிராக திரும்பி ராஜினாமா செய்திருப்பதால் நெருக்கடியில் உள்ளார். ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது.
தென்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரு மாநிலம் என்றால் அது புதுச்சேரி மட்டுமே. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், நாராயணசாமி முதல்வராக உள்ளார். 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது. இந்த கூட்டணிக்கு மொத்தம் உள்ள 30ல் 18 பேர் ஆதரவு இருந்தது.
இந்நிலையில் நாராயணசாமி முதல்வராக பதவியேற்ற நாள் முதல் சிக்கலை சந்தித்து வந்தது அம்மாநில ஆளுநர் கிரண் பேடியிடம் தான். யாருக்கு அதிக அதிகாரம் என்பதில் ஏற்பட்ட போட்டிக்கு நடுவே , முதல்வர் நாரயணசாமி எடுத்த ஒவ்வொரு நிர்வாக ரீதியான முடிவிலும் கிரண்பேடி தலையிட்டார்.

முடிந்த வரை போராடினார்
அதிகாரிகளை அழைத்து தனியாக பேசுவது, அதிரடியாக உத்தரவுகளை பிறப்பிப்பது என கிரண்பேடியின் நடவடிக்கைககளால் முதல்வர் நாராயணசாமி தலைவலிகளை தினசரி சந்தித்து வந்தார். இதன் காரணமாக கிரண்பேடிக்கு எதிராக நாரயணசாமி தன்னால் முடிந்த வரை போராடினார்.

4 எம்எல்ஏக்கள்
இந்த போராட்டம் கடந்த நான்கரை ஆண்டுகளாக இருந்து வந்தது. அண்மையில் அமைச்சர் நமச்சிவாயம், நாராயணசாமிக்கு எதிராக கிளம்பினார், அதற்கு அடுத்து
புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் அடுத்தடுத்து பதவி விலகினர். இதனால் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை ஆளும் காங்கிரஸ் இழந்துள்ளது. ஆனாலும் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என முதல்வர் நாராயணசாமி கூறி வருகிறார்,

ஐந்து வருட கனவு
இப்படியான ஓரு சூழலில் திடீர் திருப்பமாக புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நான்கரை வருடங்களாக நாராயணசாமி வைத்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருந்த மத்திய அரசு, இப்போது திடீரென கிரண் பேடியை பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளது. இதன் மூலம் நாராயணசாமியின் ஐந்து வருட கனவு நிறைவேறி உள்ளது.

18 எம்எல்ஏக்கள்
ஆனால் இதை ஏற்கும் சந்தோசமான மனநிலையில் நாராயணசாமி இல்லை. ஏனெனில் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. மொத்தமுள்ள 30 எம்.எல்.ஏக்களில் காங்கிரசுக்கு 14 பேரும், திமுகவுக்கு 3 பேரும் அரசுக்கு ஆதரவு தரும் சுயேச்சை ஒருவர் என 18 பேர் இருந்தனர்.

தகுதி நீக்கம்
இதேபோல் எதிர்கட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4 என 11 பேர் உள்ளனர். நியமன பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் சேர்த்தால் எதிர்கட்சியில் 14 பேர் உள்ளனர். இந்நிலையில் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடிகிருஷ்ணாராவ் ,ஜான்குமார் என காங்கிரசில் 4 பேர் ராஜினாமா செய்திருக்கிறார்

பெரும்பான்மை இல்லை
இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. அந்த கூட்டணிக்கு இப்போது 14 எம்.எல்.ஏக்களும், எதிர்க்கட்சியில் 14 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இதனால் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை இழந்துள்ளதால் முதல்வர் நாராயணசாமி ஆட்சியை காப்பாற்ற என்ன செய்வது என்று தீவிரமான யோசனையில் உள்ளார். ஆட்சி முடியும் நேரத்தில் பெரும் சோதனையை நாராயணசாமி எதிர்கொண்டுள்ளார்

காபந்து முதல்வர்
இப்படியான நெருக்கடியான சூழலில் தான், கிரண்பேடியை ஆளுநர் பொறுப்பில் இருந்து மத்திய அரசு நீக்கி உள்ளது. அதற்கு பதில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்துள்ளது. புதுச்சேரிக்கு இன்னும் 2மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் காபந்து முதல்வராக நாராயணசாமி மாறிவிடுவார். ஆனால் அதற்கு முன்பே ஆட்சி கவிழுமா என்ற பரபரப்பு உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications