புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் கொரோனாவிற்கு மரணம்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மரணமடைந்துள்ளார் அவருக்கு வயது 67.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 67. பொதுச்செயலாளர் பாலன் கொரோனாவிற்கு மரணமடைந்திருப்பது கட்சி நிர்வாகிகளிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டை தியாகி அன்சாரி துரைசாமி நகரில் வசித்து வரும் பாலன் கடந்த என்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நியமன எம்எல்ஏவாக இருந்தார். சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்த போது பாசிட்டிவ் உறுதியானது. இந்த நிலையில் புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் பாலன்.

Puducherry NR Congress general secretary dies of COVID 19

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்தியாவிலேயே இல்லாதவகையில் திறந்தவெளியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

எம்எல்ஏவுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த 20ம் தேதி கூடிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற அவர் தொடர்ந்து நான்கு நாட்கள் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்று உள்ளார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+