ஸ்டாம்ப் சைஸ் நரகம்.. 24 மணி நேர போதை.. வேற லெவலுக்கு மாறிய புதுவை கும்பல்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப் விற்பனை செய்துவந்த பட்டதாரி இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனிடையே புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறித்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் ஸ்டாம்ப் வடிவலான புதிய வகை போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த அருண்(30) என்பவரை லாஸ்பேட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அருண் பட்டபடிப்பு படித்துவிட்டு, மருந்து பொருட்கள் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருவதும், பெங்களூரிலிருந்து ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருட்களை வாங்கிவந்து புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனை செய்துவந்ததை ஒப்புகொண்டார்.

இதனையடுத்து அருணை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள 24 போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு ஸ்டாம்பை பெங்களூருவில் ரூபாய் 500 க்கு வாங்கிவந்து புதுச்சேரியில் 2 ஆயிரம் வரை அருண் விற்பனை செய்துள்ளார்.

இந்த போதைப்பொருளை பயன்படுத்துபவர்களுக்கு 24 மணி நேரத்திற்கு போதை இருக்குமென கூறப்படுகிறது. புதுச்சேரியில் ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications