முந்தானைக்குள் மறைக்க வேண்டிய பொருளா அது.. மண்டைக்கு மேல இருக்குற கொண்டையை மறந்த பெண்கள்!
புதுச்சேரி: முந்தானைக்குள் மறைக்க வேண்டிய பொருளா அது.. எவ்வளவு நேக்காக திருடி இருக்கிறார்கள்.. பாவம் மண்டைக்கு மேல் இருக்கும் கொண்டயை அதாங்க சிசிடிவியை மறந்துவிட்டார்கள். அதனால் இப்போது போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்கள்.
Recommended Video
டிபார்ட்மென்ட் ஸ்டோரில் சுற்றி முற்றி யாரும் இல்லையே என்று பார்க்கும் சில பெண்கள் அல்லது ஆண்கள், தங்களுக்கு பிடித்த பொருட்களை எடுத்து உடலில் மறைத்து கொண்டு தப்பிவிடுகிறார்கள் ஆனால் சிசிடிவி கேமராக்கள் இருப்பது அவர்களுக்கு தெரிவது இல்லை. கடைசியில் மாட்டிக்கொள்கிறார்கள்.
இப்படித்தான் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் விலை உயர்ந்த பொருட்களை திருடியதால் இரண்டு பெண்களை சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்
புதுச்சேரி கடலூர் செல்லும் சாலையில் உள்ள நயினார் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது ஜி எஸ் என்கிற தனியார் டிபார்ட்மென்டல் ஸ்டோர். இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உள்ள பொருட்களை கணக்கெடுக்கும் போது விலை அதிகம் உள்ள ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருப்பது உறுதியானது.

ஹார்லிக்ஸ் பூஸ்ட்
இதையடுத்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 29ஆம் தேதி இரவு 8 மணி அளவில் கடைக்குள் வந்த 2 பெண்கள் விலை உயர்ந்த ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் டப்பாக்களை தனது முந்தானை மூலம் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

திருடிய பெண்கள்
இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கடையின் உரிமையாளர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு கடையில் திருடும் பெண்களை முதலியார்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர். சிசிடிவி கேமராக்கள் இருப்பதன் காரணமாக குற்றச்செயல்களை செய்யும் பெண்கள் எளிதாக மாட்டிக்கொள்வார்கள் என்பதுடன் அவர்கள் முகம் பொதுவெளியில் வந்து அவமானப்படும் நிலையும் வருகிறது.

மண்டைக்கு மேல் கொண்டை
ஹார்லிக்ஸ், பூஸ்ட் , மளிகை பொருட்கள் மீது நப்பாசையில் திருடிய பெண்கள், உண்மையில் சுற்றி என்ன இருக்கிறது. இதனால் நமக்கு ஏற்படப்போகும் விளைவுகள் என்ன என்பது பற்றி சற்றும் அறியாதவர்கள் ஆவர். அவர்கள் செய்யும் இந்த குற்றம் அவர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தையும் சேர்த்தே பாதிக்கும். சிசிடிவி காட்சிகளால் மாட்டிக்கொண்டு அசிங்கப்படவும் நேரிடுகிறது. எனவே டிபாட்மெண்ட் ஸ்டோர், நகைக்கடை உள்பட எந்த கடைக்கு சென்றாலும் யாரும் பார்க்கவில்லை நம்மை.. நாம் இதை அபேஸ் செய்துவிடலாம் என்று நினைப்பதை அவர்கள் நிறுத்துவது நல்லது. திருடுவது தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும். ஏனெனில் மண்டைக்கு மேல் கொண்டை போல் சுற்றிக்கொண்டிருக்கிறது சிசிடிவி கேமரா. அதில் சிக்கிவிடுவார்கள்.












Click it and Unblock the Notifications