எதை பத்தியும் கவலை இல்லை.. மாஸ்க் போடல.. புதுச்சேரி ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் 500 பேர் பங்கேற்பு
புதுச்சேரி: கையில் அரிவாள், கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடிகள் திடீரென சடலமாக விழுந்து கிடந்தனர்.. முன் விரோதம் காரணமாக நடந்த ரவுடிகளின் கொலை புதுச்சேரியில் நடந்துள்ளது.. இந்த ரடிவுயின் இறுதி சடங்கில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. ஆனால் ஒருத்தரும் மாஸ்க் போடவில்லை.. அங்கேயே இருந்த போலீசாரும் இதை கண்டுகொள்ளவும் இல்லை.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி வில்லியனூர் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த வழுதாவூர் முரளிதரன் 19, கொடாத்தூர் சந்துரு 23, என்ற இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கொன்றது 10க்கும் மேற்பட்ட ஒரு கும்பல்.
Recommended Video
கடந்த 2-ம் தேதி படுபயங்கரமான கொலை நடந்துள்ளது... இந்த சடலங்களை பார்த்ததும் பொதுமக்கள் உடனடியாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் சொல்லவும், விசாரணையும் ஆரம்பமானது.

அப்போதுதான் பைக் எரிப்பு முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.. இது தொடர்பாக 7 பேர் பிடிபட்டுள்ளனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட முரளி. சந்துருவின் உடல்கள் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
வழுதாவூரில் முரளியின் இறுதி சடங்கும் நடந்தது.. இதில் முரளியின் நண்பர்கள், ஆதரவாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. ஆனால், யாருமே மாஸ்க் அணியவில்லை.. தனிமனித இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை.. நெருக்கி தள்ளி அந்த சவ ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

இதைதவிர 100 பைக்குகளில் முரளியின் நண்பர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருந்தனர்.. இந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. தற்போது லாக்டவுன் அமலில் உள்ளது.. பொதுவாக, இறப்பு நிகழ்ச்சி என்றால், 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை மீறி இந்த இறுதி ஊர்வலம் நடந்துள்ளது.
இதில் வேதனை என்னவென்றால், கண்டமங்கலம் போலீஸார் இதை கண்டுகொள்ளவில்லையாம்.. ஆனால் விதிகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளோம் என்று போலீஸ் தரப்பு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. ரவுடின் இறுதி ஊர்வலம் வீடியோ வெளியாகி புதுச்சேரி மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications