Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழகிய சிரிப்பு.. மனைவியை ரசித்து பேசிய கறிக்கடைக்காரர்.. புதுச்சேரி நண்பருக்கு கணவரின் மதிய விருந்து

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் விளையாட்டு மைதானம் பின்புறமுள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் மீது, ரத்தக்கறையுடன் கிடந்த சடலத்தை கண்டு அந்த பகுதி மக்கள் தெறித்து ஓடினார்கள்.. மிக கொடூரமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கும் தகவல் தந்துள்ளார்கள்.. இதற்கு பிறகு ஒரே நாளில் போலீசார் எடுத்த அதிரடியால் குற்றவாளிகள் சிக்கியிருக்கிறார்கள்.

2 நாட்களுக்கு முன்பு, புதுச்சேரி உப்பளம் விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் மீது இளைஞரின் சடலம் கிடப்பதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Puducherry Wife Friend

பாலத்தின் மீது இளைஞர்

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பாலத்திற்கு சென்று விசாரணையை துவக்கினார்கள்.. கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை மீட்டு
போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்... பிறகு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் 'ரோஜர்' வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

பிறகு போலீசாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர், உழவர்கரை, பஜனை மடத்து வீதியை சேர்ந்த 24 வயது சந்துரு என்பதும், நைனார்மண்டபத்தில் கறிக்கடையில் கோழிகளை ஏற்றி, இறங்கும் லோடுமேனாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனால் போலீசார் சந்துருவிடம் பழகியவர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணையை விரிவுபடுத்தினர்.

காவ்யாவின் அழகிய சிரிப்பு

அப்போதுதான், நைனார்மண்டபம் வெங்கடேஷ் என்பவரின் பெயர் அடிபட்டது.. கொலை செய்யப்பட்ட சந்துருவுடன் வெங்கடேஷ் நெருங்கிய நண்பராக பழகி வந்ததும் தெரியவந்தது.

வெங்கடேஷூக்கு திருமணமாகி காவ்யா என்ற மனைவி உள்ளார்.. வெங்கடேஷ் தம்பதியினர் வம்பாகீரப்பாளையத்தில் வசித்து வருகிறார்கள்.. அடிக்கடி தன்னுடைய நண்பனை சந்திப்பதற்காக சந்துரு வெங்கடேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார்..

அப்போதுதான், நண்பனின் மனைவி காவ்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. பிறகு சந்துருவும், காவ்யாவும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். எந்நேரமும் காவ்யாவின் சிரிப்பு, அழகையும் வர்ணித்து பேசி கொண்டேயிருப்பாராம்.

மதிய நேரத்தில் மது விருந்து

இது தெரிந்த வெங்கடேஷ் அதிர்ச்சியடைந்து, இனிமேல் தன்னுடைய மனைவியிடம் பேச வேண்டாம் என்று சந்துருவை கண்டித்துள்ளார்.. ஆனாலும் சந்துரு, தொடர்ந்து காவ்யாவுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வெங்கடேஷூக்கு ஆத்திரம் அதிகமாகி, சந்துருவை கொன்றுவிடுவதென்று முடிவெடுத்துள்ளார்.. இதற்காக தன்னுடைய நண்பர்களின் உதவியையும் நாடினார்.. சந்துருவை கொலை செய்ய நாளையும் குறித்தார்.

அதன்படி 2 நாட்களுக்கு முன்பு, காவியா திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தபோது, சந்துருவை வீட்டுக்கு வருமாறும், ஒன்றாக சேர்ந்து மது அருந்தலாம் என்றும் சொல்லி வெங்கடேஷ் அழைத்துள்ளார்.. அதன்படியே வெங்கடேஷ் வீட்டிற்கு சென்ற சந்துருவுக்கு மதுவை அளவுக்கு அதிகமாக ஊற்றி தந்திருக்கிறார்கள் வெங்கடேஷூம், அவரது நண்பர்களும்.

சந்துருவுக்கு போதை தலைக்கேறியதுமே, வெங்கடேஷ் தனது நண்பர்கள் சரண், ராஜேஷ், ஆகியோருடன் சேர்ந்து சராமாரியாக வெட்டி கொன்றார்.. பிறகு சந்துருவின் சடலத்தை கழிவுநீர் வாய்க்கால் பாலத்தில் வீசிவிட்டு சென்றதும் விசாரணையில் உறுதியானது.

மதிய நேரம் மது விருந்து

இதையடுத்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேஷ், சரண், ராஜேஷ் ஆகிய 3 பேரையும் நேற்றைய தினமே கைது செய்துவிட்டனர்.. அவர்களை விசாரித்து வருகின்றனர்... இந்த சம்பவம் புதுச்சேரியில் மிகுந்த பரபரப்பை தந்துள்ளது.

அதாவது சந்துருவை, மது அருந்துவதற்காக மதிய நேரம் வீட்டுக்கு வர சொல்லியிருக்கிறார் வெங்கடேஷ்.. பிறகு மதியம் 2 மணிக்கு அவரை அடித்தும் கொன்றுவிட்டனர். ஆனால் கொலை பகலில் நடந்துவிட்டதால், சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளனர்.. இதனால் வெளியே கொண்டு செல்லாமல், வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளனர்.

சாவகாசமாக பினாயிலை ஊற்றி..

பிறகு, சடலத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, வீட்டில் படிந்திருந்த ரத்த கறைகளை பினாயில் ஊற்றி சாவகாசமாக சுத்தம் செய்திருக்கிறார்கள்.. பிறகு கொலை செய்த 3 பேரும் வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு சென்று மது குடித்துவிட்டு, அன்றைய நேற்று முன்தினம் நள்ளிரவுதான் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

பிறகு வீட்டில் மறைத்து வைத்திருந்த சந்துரு உடலை நேற்று அதிகாலை 4 மணிக்கு அதாவது கொலை செய்யப்பட்டு 14 மணி நேரம் கழித்துதான் உப்பளம் பகுதியிலுள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் மீது வீசிவிட்டு சென்றிருக்கிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+