சிறுமிக்கு இப்படி ஆகிடுச்சே.. மேடையிலேயே கண் கலங்கிய புதுச்சேரி சபாநாயகர் செல்வம்.. உருக்கமான பேச்சு
புதுச்சேரி: சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்த அரசு விழா மேடையில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கண் கலங்கியபடி பேசினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவருடைய 9 வயது மகள் ஆர்த்தி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2-ந்தேதி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மாணவி ஆர்த்தி திடீரென காணாமல் போனார்.

இந்தநிலையில் ஆர்த்தியை அவளது பெற்றோர் தீவிரமாக தேடி உள்ளார்கள். ஆனால் மாணவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசிடம் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தார்கள்.. இதில் ஒரே ஒரு ஒரு கேமரா பதிவில் ஆர்த்தி மட்டுமே தனியாக அப்பகுதியில் நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதனிடையே மாணவியை பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில்,, பெற்றோரும், உறவினர்களும் கவலை அடைந்தனர்.. இதனால் புகார் அளித்த முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற அவர்கள, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது போலீசாரிடம் அவர்கள் ஆத்திரத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாரக்ள். இதனிடையே மாயமான மாணவி ஆர்த்தியை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசை சந்தித்து புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஒரே ஒரு கேமராவில் மட்டுமே மாணவியின் நடமாட்டம் பதிவாகி இருப்பதால் வேறு எங்கும் சிறுமி சென்று இருக்க வாய்ப்பில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். அத்துடன் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள வீடு வீடாக சென்று மாணவி ஆர்த்தியின் புகைப்படத்தை காண்பித்து போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில் மாயமான மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் சாக்கடை கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சாக்கடை கால்வாயில் தேடி பார்த்த போது, வேட்டியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் ஆர்த்தியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மாணவி ஆர்த்தியின் உடலை சாக்கடையில் இருந்து வெளியே மீட்டனர். இறந்து 3 நாட்கள் ஆனதால் அழுகி துர்நாற்றம் வீசியது. சம்பவம் நடந்த அன்ற தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த மாணவியை, பார்த்த சிலர் மறைவான பகுதிக்கு கடத்திச் சென்று கை, காலை கட்டி கொலை செய்துள்ளனர். அதை மறைக்க வேட்டியால் உடலை சுற்றி கட்டி, சாக்கடை கால்வாயில் வீசியது தெரியவந்தது.
இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேபோல் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. நேற்று முழுக்க புதுச்சேரி நகரமே கொந்தளிப்பான நிலைக்கு சென்றது.. போலீஸ் மட்டுமின்றி துணை ராணுவத்தினரே வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதனிடையே சிறுமியை கொன்றது குழந்தை கடத்தும் கும்பலா? அல்லது கஞ்சா அடிக்கும் இளைஞர்களா? என்பது குறித்து போலீசார் விசாரிக்க துவங்கினர்.. சம்பந்தப்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஐந்து பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், 19 வயதாகும் கருணாஸ் என்ற இளைஞரும், 60 வயதாகும் விவேகானந்தன் என்பவரும் பிஞ்சை நாசம் செய்யும் முயற்சியில் கொலை செய்தது தெரியவந்தது.. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகிறார்கள். இதனிடையே இளைஞர் கருணாஸ் போலீசாருக்கு குழந்தையை தேட உதவுவது போல் நடித்து சுற்றி வந்துள்ளார்..
இதனிடையே புதுச்சேரி சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்த அரசு விழா மேடையில் அம்மாநில சபாநாயகர் செல்வம் கண் கலங்கியபடி பேசினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் பேசும் போதே உணர்ச்சிவயப்பட்ட சபாநாயகர் செல்வம்.. ஐந்து பேர் கும்பல் குழந்தையை சிதைத்துவிட்டார்கள்.. இது கொடூரமான நிகழ்வு.. புதுச்சேரியில் 3 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. பெற்றோர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன்.. கண்டிப்பாக உங்கள் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்துவிட்டால், அவர்களுடன் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்" என்றார்..












Click it and Unblock the Notifications