மத்திய அரசு மே 31 க்கு பிறகு ஊரடங்கில் தளர்வு.. புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
புதுச்சேரி: மத்திய அரசு மே 31 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வு அளிக்க உள்ளதாகவும், இதனால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று வரை 51 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மண்ணாடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். கொரோனா சிறப்பு மருத்துவமனையாக உள்ள கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் தூய்மைப்பணி சரியாக நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகின்றது.

இதை மேம்படுத்துவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எனது தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு மேலும் தளர்வுகளை வரும் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளது. இதனால் பெரிய பாதிப்புகள் வரும். மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே கொரோனாவை வெற்றி கொள்ள முடியும். எனவே தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications