மட்டன் முதல் மீன் வரை 10 வகை கறி விருந்து! பாஸ் ஆன அரசு போலீஸ்காரர்களுக்கு புதுச்சேரி ஓனரின் அசத்தல்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் நடந்த காவலர் தேர்வில் வெற்றி பெற்ற தனது மாணவர்களுக்கு அளித்த பிரம்மாண்டமான கறி விருந்து, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்த விருந்து? இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
வெறும் வணிக நோக்கம் கொண்டதாக பார்க்கப்படும் இன்றைய பயிற்சி மையங்களுக்கு மத்தியில், மாணவர்களின் வெற்றியைத் தனது குடும்ப விழாவாகக் கொண்டாடிய உரிமையாளர் குமரனின் செயல் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

புதுச்சேரி அரசு காவலர்கள்
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் தனியார் பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.. நீண்டகாலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை இந்த மையம் தயார்படுத்தி வருகிறது.
இங்கு பயின்ற பல மாணவர்கள் ஏற்கனவே பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற காவலர் தேர்வு முடிவுகள் இந்த மையத்திற்குப் பெரும் பெருமையை தேடித்தந்துள்ளன. இந்த தேர்வில் மையத்திலிருந்து பங்கேற்ற 58 மாணவர்களில் 24 பேர் தேர்ச்சி பெற்று, அரசுப் பணிக்கான தகுதியை பெற்றுள்ளனர்.
மட்டன், காடை விருந்து
கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றது பயிற்சி மையத்தின் தரத்தையும் மாணவர்களின் உழைப்பையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது..
கடந்த மாதம் நடந்த தேர்வில் 58 மாணவர்களில் 24 பேர் அரசு பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இந்த சாதனையை சிறப்பிக்கும் வகையில், பயிற்சி மைய வளாகத்தில் பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவின் தொடக்கத்தில், வெற்றி பெற்ற 24 மாணவர்களுக்கும் பயிற்சி மையத்தின் உரிமையாளர் குமரன் சால்வை அணிவித்து, பூங்கொத்துகள் வழங்கித் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஆனால், இந்த அதிகாரப்பூர்வமான பாராட்டுடன் முடிந்துவிடாமல், மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவிருக்ககூடிய ஒரு நெகிழ்ச்சியான இன்ப அதிர்ச்சியையும் அளிக்க அவர் திட்டமிட்டிருந்தார்.
கறி விருந்து - மீன் வறுவல்
எனவே மாணவர்களின் கடும் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான அசைவ விருந்து பரிமாறப்பட்டது. மட்டன் பிரியாணி, சிக்கன் 65, காடை வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல் எனப் 10 வகையான கறி உணவுகள் அந்த விருந்தில் இடம்பெற்றன.
இது தவிர அவித்த முட்டைகள், கத்தரிக்காய் தொக்கு, தயிர் பச்சடி மற்றும் இனிப்புக்காகப் பிரட் அல்வா என நாவூறும் சுவையில் உணவுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஒரு ஆசிரியராகவோ, உரிமையாளராகவோ அல்லாமல் ஒரு மூத்த சகோதரராக இருந்து குமரன் இந்த உணவுகளைப் பரிமாறியது மாணவர்களை நெகிழ செய்தது.
இந்த விருந்தை வயிறார உண்டு மகிழ்ந்த மாணவர்கள், உரிமையாளரின் இந்த அன்பான செயலுக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்..
ஓனர் அசத்தல்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாணவர்கள் பேசும்போது, தங்களின் ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமையைக் கடந்து, விடாமுயற்சியுடன் படித்து இன்று போலீஸ் அதிகாரியாக உயர்ந்துள்ள நிலையில், இந்த அங்கீகாரம் தங்களுக்கு பெரும் ஊக்கமளிப்பதாக அவர்கள் உணர்ச்சிப்பெருக்குடன் சொன்னார்கள்..
தங்களை ஒரு அரசு ஊழியராக மாற்றிய ஆசிரியர்களுக்கும், அரவணைப்புடன் வழிநடத்திய நிறுவனருக்கும் மனதார வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட மாணவர்கள், இனிப்புடன் கூடிய இந்த விருந்து எங்களால் எப்போதுமே மறக்க முடியாத ஒன்று என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்கள்..
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications